Asianet News TamilAsianet News Tamil

“பாலையில் பூத்த சோலை...” - நக்சலைட் பகுதியில் உருவான பெண் ஐஏஎஸ் அதிகாரி

girl passed civil service exam from naxalites area
girl passed civil service exam from naxalites area
Author
First Published Jun 1, 2017, 1:17 PM IST


சட்டீஸ்கர் மாநிலம், தாண்டேவாடா பகுதி நக்சல் அமைப்பினரின் கூடாரமாக உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பெண், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று 99வது இடத்தை பிடித்துள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலம், தாண்டே வாடா பகுதியில் நக்சல் அமைப்பினர் அதிகளவில் உள்ளனர். இந்த பகுதயில், அடிக்கடி நக்சல் தாக்குதல் நடத்தப்படுவதால், கலவர பூமியாகவே நினைத்து மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த பகுதியில் நடந்த நக்சல் தாக்குதல்களில், பல்வேறு பாதுகாப்பு அதிகாரிகள் பலியாகியுள்ளனர். இதற்கிடையில், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர்,  யுபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய அளவில் 99வது இடத்தை பிடித்துள்ளார்.

தாண்டேவாடா கீதம் நகரை சேர்ந்தவர் ஜவஹர்லால் ஜெயின். தொழிலதிபர். இவரது மகள் நம்ரதா ஜெயின். அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்த அவர் பிலால் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார்.

தொடர்ந்து நர்மதா ஜெயின், ஐஏஎஸ் ஆக வேண்டும் என முயற்சி செய்தார். முதல் முயற்சியில் தோல்வி கிடைத்த நம்ரதாவுக்கு 2வது முறை வெற்றி கிடைத்தது. முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற அவர், மாவட்ட நிர்வாகம் நடத்திய ஐஏஎஸ் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார்.

கடந்த மார்ச் மாதம் நடந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நர்மதாவுக்க, மாநில முதல்வர் ரமன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். நம்ரதாவின் வெற்றி மற்ற இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் எனவும் கூறியள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios