girl filed case on yogi adityanath

உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், பா.ஜனதா எம்.பி. ஆர்.பி. சர்மா ஆகியோர் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, நடந்த ஒரு கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆதிவாசி பெண்ணின் நிர்வாணப்படத்தை தற்போது பேஸ்புக்கில் வௌியிட்டதற்காக பாதிக்கப்பட்ட அந்த பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். 

சர்ச்சைபடம்

உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தை பேஸ்புக்கில் 95 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இதைப் பயன்படுத்தி, அரசியல் உள்நோக்கத்துடன் பா.ஜனதாவின் தேஜ்பூர் எம்.பி. ஆர்.பி. சர்மா சார்பில் தற்போது ஒரு புகைப்படம் வௌியிடப்பட்டுள்ளது. 



இது தொடர்பாக அசாம் போலீஸ் டி.ஜி.பி. முகேஸ் சாஹேயிடம் புகார் அளித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தைப் பயன்படுத்தி, தவறான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது, இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 

வழக்கு
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி ஓரங்க இது தொடர்பாக அசாமில் பிஸ்வாந்த்சைராலி மாவட்ட நீதிமன்றத்தில் முதல்வர ஆதித்யநாத், எம்.பி. சர்மா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். 

ஆதித்யநாத் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இது குறித்து லட்சுமி ஓரங் கூறுகையில், “ இந்த விவகாரம் தொடர்பாக நான் வழக்கறிஞர்களுடன் தீவிரமாக ஆலோசனை செய்து, யோகி ஆதித்யநாத், எம்.பிஆர்.பி.சர்மா ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுபோன்ற புகைப்படத்தை வௌியிடும்போது, முதல்வர்ஆதித்யநாத் கவனமாக இருக்க வேண்டும். அவரின் குடும்ப உறுப்பினராக நான் இருந்தால் இப்படி செய்வார்களா?. என் நிர்வாணப் புகைப்படத்தை தவறாகப்பயன்படுத்தினால் நான் பொறுமையாக இருக்கமாட்டேன். கடந்த 10 ஆண்டுகளாகமனதளவில் நான் பாதிக்கப்பட்டு இருக்கறேன்’’ என்றார்.