Asianet News TamilAsianet News Tamil

கோல் வகை மீனுக்கு கௌரம் செய்த குஜராத் அரசு! மாநில மீனாக அறிவித்த முதல்வர்!

கோல் மீனின் நீளம் சுமார் ஒன்றரை மீட்டர் இருக்கும். கோல் மீன் எவ்வளவு நீளமாக இருக்கிறதோ, அதற்கு ஏற்ப விலை அதிகமாக இருக்கும். ஒரு யூனிட் நீளம் கொண்ட கோல் மீனின் விலை 5 லட்சம் ரூபாய் வரை இருக்கும். 

Ghol fish declared state fish of Gujarat. Its price will cost you a Europe trip sgb
Author
First Published Nov 21, 2023, 10:19 PM IST | Last Updated Nov 21, 2023, 10:19 PM IST

அகமதாபாத்தில் நடைபெற்ற இரண்டு நாள் உலகளாவிய மீன்பிடி மாநாட்டின்போது, ​​குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கோல் மீனை குஜராத் மாநில மீனாக அறிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தங்க பழுப்பு நிறத்தில் இருக்கும் கோல் மீன் இந்தியாவில் காணப்படும் மிகப்பெரிய மீன்களில் ஒன்றாகும். இந்த வகை மீன்கள் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடல் பகுதிகளில் காணப்படுகின்றன.

இது மதிப்புமிக்க மீன் வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மீனின் இறைச்சி காரணமாக இதற்கு அதிக டிமாண்ட் உள்ளது. கோல் மீன் பீர் மற்றும் ஒயின் தயாரிக்க முக்கியப் பொருளாகப் பயன்படுகிறது. மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

கோல் மீனின் இறைச்சி, சிறுநீர்ப்பை மும்பையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. கோல் மீனின் நீளம் சுமார் ஒன்றரை மீட்டர் இருக்கும். கோல் மீன் எவ்வளவு நீளமாக இருக்கிறதோ, அதற்கு ஏற்ப விலை அதிகமாக இருக்கும். ஒரு யூனிட் நீளம் கொண்ட கோல் மீனின் விலை 5 லட்சம் ரூபாய் வரை இருக்கும். இதனால் கோல் மீனைப் பிடிக்கும் மீனவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும்.

அகமதாபாத்தில் நடந்த இரண்டு நாள் உலகளாவிய மீன்பிடி மாநாட்டின்போது பேசிய மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, ​​அண்மைக் காலத்தில் மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச மாநில மீன்வளத்துறைகளும் அந்தந்த மாநிலங்களில் காணப்படும் தனித்துவமான மீன்களை மாநில மீனாக அறிவித்தன என்று குறிப்பிட்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios