Asianet News TamilAsianet News Tamil

ராணுவத்தை வாடகைக்கு விடுவதா? அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறுங்கள்... பஞ்சாப் முதல்வர் அதிரடி!!

அக்னிபாத் திட்டத்தை கட்டாயம் திரும்ப பெற வேண்டும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் தெரிவித்துள்ளார். 

get back the agnipath project says punjab chief minister bhagwant mann
Author
Punjab, First Published Jun 17, 2022, 9:37 PM IST

அக்னிபாத் திட்டத்தை கட்டாயம் திரும்ப பெற வேண்டும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் தெரிவித்துள்ளார். ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 23 வயதுக்கு உள்பட்டவா்களை ஒப்பந்த அடிப்படையில் நான்காண்டு பணிக்குச் சோ்த்துக் கொள்ளும் அக்னிபத் திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினாா். முப்படைகளின் தலைமைத் தளபதிகள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படும் வீரா்களில் பெரும்பாலானோருக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது. இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, பிகாரில் ராணுவத்தில் சோ்வதற்காகப் பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞா்கள் புதன்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

get back the agnipath project says punjab chief minister bhagwant mann

மூன்றாவது நாளான இன்றும் அவா்களின் போராட்டம் தொடா்ந்தது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தை கட்டாயம் திரும்ப பெற வேண்டும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் தெரிவித்துள்ளார். அரசின் அக்னிபாத் திட்டத்தை ஆதரித்தும் விமர்சித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதோடு இந்த திட்டத்திற்கு எதிராக பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

get back the agnipath project says punjab chief minister bhagwant mann

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், ராணுவ வீரர்களை வாடகைக்குப் பணியமர்த்த முடியாது. 21 வயதிலேயே ஓர் இளைஞரை முன்னாள் படை வீரராக எப்படி ஆக்க முடியும்? கடினமான சூழல்களில் நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் ராணுவ வீரர்கள். அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வு பெற மாட்டார்கள். ராணுவ வீரர்களும் மக்களும் தான் ஓய்வு பெறுவார்கள். வாடகைக்கு பணியாற்றும் ராணுவம் நமக்கு தேவையில்லை. அக்னிபாத் திட்டத்தை கட்டாயம் திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios