பிரதமர் கையால் விருது.. இந்தியாவின் பணக்கார டெக் YouTuber - யார் இந்த கௌரவ் சௌத்ரி? அவர் Net Worth எவ்வளவு?

Gaurav Choudhary : இந்த டிஜிட்டல் உலகில் இப்போதெல்லாம் ஒரு துறையில் நல்ல அனுபவம் இருந்தால் போதும், இணையம் மூலம் அதை மக்களிடம் கொண்டுசேர்த்து பெரிய அளவில் புகழடைய முடியும்.

Gaurav Choudhary Indias Richest Youtuber won award from PM Modi what is his net worth ans

அந்த வகையில் உலக அளவில் புகழ் பெற்ற பணக்கார YouTuber தான் கௌரவ் சௌத்ரி, சில தினங்களுக்கு முன்பு புகழ்பெற்ற பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பப் பிரிவில் சிறந்த படைப்பாளிக்கான விருதை கௌரவ் சவுத்ரிக்கு வழங்கினார். தனது சிறப்பான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற கௌரவ் சௌத்ரியின் சொத்து மதிப்பு 360 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.
 
டெக்னிக்கல் குருஜி என்று பிரபலமாக அறியப்படும் கௌரவ் சௌத்ரி, இந்தியாவின் பணக்கார தொழில்நுட்ப யூடியூபர் ஆவார். உலகம் முழுவதும் அதிகம் பார்க்கப்பட்ட தொழில்நுட்ப யூடியூபர்களில் இவரும் ஒருவர். அவர் "டெக்னிகல் குருஜி" என்ற பெரிய யூடியூப் சேனலை நடத்தி வருகிறார், அதில் 23.5 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். 

2024ஆம் ஆண்டு நீட் எம்.டி.எஸ். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு!

டெக்னிக்கல் குருஜி எனப்படும் கௌரவ் சௌத்ரி 1991 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் அஜ்மீரில் பிறந்தார். அவர் கேந்திரிய வித்யாலயாவுக்குச் சென்று தனது 16வது வயதில் கோடிங் எழுதத் தொடங்கினார். தனது கோடின் துறையில் இருந்த நிபுணத்துவம் காரணமாக, அவர் தனது டிஜிட்டல் சாம்ராஜ்யத்தை நிறுவினார். BITS பிலானியின் துபாய் வளாகத்தில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் துறையில் பட்டம் பெற்றார். 

அவர் யூடியூப்பில் இருந்து பெரும் தொகையை சம்பாதிப்பது மட்டுமல்லாமல், துபாயில் தனியே ஒரு தொழிலையும் நடத்துகிறார். துபாயில் உள்ள சுமார் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 2012ல் யூடியூப் சேனலைத் நிறுவ நினைத்தார். பின் "டெக்னிகல் குருஜி" என்ற சேனலைத் தொடங்க அவருக்கு மூன்று வருடங்கள் ஆனது. 

கடந்த 2017 இல், அவர் 10 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்றார். சிக்கலான விஷயங்களை எளிமையான மொழியில் விளக்குவதில் பெயர் பெற்றவர் இவர். இவரது வீட்டில் மொத்தம் 11க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. அவரது நீல நிற ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்டின் சந்தை மதிப்பு சுமார் ரூ.8 கோடி. அவரது McLaren GTயின் விலை சுமார் ரூ. 4.75 கோடி.

மேலும் அவரது ரேஞ்ச் ரோவர் வோக் விலை ரூ.2.10 கோடி. இவரது Porsche Panamera GTSயின் விலை ரூ.1.90 கோடி. அவரது போர்ஸ் பனமேராவின் விலை ரூ. 1.89 கோடி. அவரது Mercedes Benz G-Classன் விலை ரூ. 1.72 கோடி. அதே போல அவரது BMW 750Li காரின் விலை கார் ரூ. 1.42 கோடி. இவை இல்லாமல் 15.54 லட்சத்தில் மஹிந்திரா தாரின் டாப் மாடலையும் அவர் வைத்திருக்கிறார்.

எல்லைகளில் நவீன உள்கட்டமைப்புகளை காங்கிரஸ் உருவாக்கவில்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios