தலைநகர் டெல்லியில் தனியார் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட வாயு கசிவால், 100 குழந்தைகள் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லி துல்லக்பாத் பகுதயில் தனியார் பள்ளி செயல்படுகிறது. விடுதியுடன் கூடிய இந்த பள்ளியில் டெல்லியில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் தங்கி படிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை ஒரு கன்டெய்னர் லாரி பள்ளியின் அருகே நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் அந்த லாரியில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் பரவியது. இதில், பள்ளியில் தூங்கி கொண்டிருந்த குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அனைவரும் மயக்கமடைந்தனர்.

அதேபோல் பள்ளி மற்றும் விடுதி காப்பாளர்கள் மற்றும் காவலர்களுக்கும் மயக்கம் ஏற்பட்டது. உடனே, விடுதியில் தங்கியுள்ள குழந்தைகளை பார்க்க சென்றனர். அங்கு அனைவரும் மயக்க நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். உடனடியாக ஆம்புலன்ஸ்கள் வரவழைத்து மாணவ, மாணவிகளை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.