சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்துக்கு உட்பட்ட டாங்கர் கிராமத்தை சேர்ந்தவர் பிஷன் தாஸ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராம்பன் நகரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடிவந்தார். அதில் தனது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவில் ஒரு திருமணத்துக்காக வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்தில் பிரித்தம் சிங் என்ற உறவினர் பிஷன் தாஸ் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் பிஷன் தாசின் மனைவி தர்ஷனா தேவி (36) பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் வீடு முழுவதும் மளமளவென அனைத்து இடங்களில் தீ பரவியது. இது தொடர்பாக உடனே தீணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், 4 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றொரு மகள் அனிதா தேவி (5), மகன் ஜகிர் சந்த் மற்றும் உறவினர் பிரித்தம் சிங் ஆகிய 3 பேரும் படுகாயங்களடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தைகள் இருவரும் நேற்று காலையில் பலியானார்கள். பிரித்தம் சிங்கின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.