சூதாட்ட கும்பலை சேர்ந்த அலீஷ்பா என்ற பெண், ஷமிக்கும் அவருக்கும் இருக்கும் தொடர்பு குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் சமியும் நானும் நல்ல நண்பர்களாகவே பழகினோம் எனவும் அவரது மனைவி கூறுவது போல் தவறான எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது  அவருடைய மனைவி பல்வேறு புகார்களை வைத்தார்.

அதன்படி,ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் புகார் இருப்பதாகவும்,அவர் தொடர்ந்து பல ஆபாச சாட் செய்துள்ளதாகவும் அதனை ஸ்க்ரீன் சாட் எடுத்து அப்படியே பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் ஹசின் ஜகாத்.

ஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார் என்று அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். 

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,ஷமி குடும்பத்தினர் கூட தன்னை தாக்கியதாகவும்,ஷமி அவர் குடும்பத்தாருடன் சேர்ந்து தன்னை கொலை செய்ய முதற்பட்டதாகவும் கூறி இருந்தார்.

தற்போது ஒரு குழந்தை இருப்பதால் இதுவரை பொறுமை காத்து வந்ததாகவும்,கொடுமை தாங்க முடியாமல் இருப்பதால் இனி சட்ட ரீதியாக அணுக உள்ளதாகவும் பேட்டியின் போது தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து கொல்காத்தாவில் உள்ள லால்பசார் காவல்நிலையத்தில் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஹசின் ஜகான் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது இதுகுறித்து சூதாட்ட கும்பலை சேர்ந்த அலீஷ்பா பேட்டி அளித்துள்ளார். 

அதில் நானும் ஷமியும் நல்ல நண்பர்கள் எனவும் ஷமியின் மனைவி கூறுவது போல எங்களுக்குள் எந்த விதமான மோசமான தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் ஷமியின் மனைவி ஏன் அப்படி குற்றச்சாட்டு வைக்கிறார் என்று தெரியவில்லை எனவும்  போலீஸ்தான் இதில் விசாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

நாங்கள் பேஸ்புக் மூலம் நண்பர்கள் ஆனோம். அவரை எனக்கு மூன்று வருடமாக தெரியும். முதலில் ரசிகையாக இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக பேசி தற்போது நண்பர்கள் ஆகியுள்ளோம். எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.