கங்கை நீரின் மர்மம்! மைக்ரோஸ்கோப்பில் பார்த்தவருக்குக் காத்திருந்த ஆச்சரியம்!

கங்கை நீரின் தூய்மையை சோதிக்க ஒருவர் நுண்ணோக்கியைப் பயன்படுத்தினார். வீட்டிலும், மருத்துவமனையிலும் சோதித்ததில் ஆச்சரியமான முடிவுகள் கிடைத்தன. நான்கு நாட்கள் கழித்தும் நீரில் பாக்டீரியாக்கள் இல்லை.

ganga water microscope test viral video

சமூக ஊடகங்களில் வெவ்வேறு விஷயங்களை மைக்ரோஸ்கோப்பில் பார்த்து பதிவிடும் போக்கு காணப்படுகிறது. உணவுப் பொருட்கள் உட்பட பல வகையான பொருட்களை நுண்ணோக்கி மூலம் மக்கள் பார்க்கின்றனர். வெறும் கண்களால் நமக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் நன்றாகத் தெரியும்.

ஒருவர் கங்கை நீரின் தூய்மையை சரிபார்க்க மைக்ரோஸ்கோப்பை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தார். கங்கை நீரின் தூய்மையை பரிசோதிப்பதற்காக அந்த நபர் ஹரித்வாரில் கங்கை ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்துள்ளார். பிறகு, அந்த நபர் முதலில் தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த மைக்ரோஸ்கோப் மூலம் கங்கை நீரின் மாதிரியைப் பார்த்தார்.

அதில் கிடைத்த முடிவை நம்பாததால், ஒரு பெரிய மருத்துவமனையின் ஆய்வகத்தில் இருக்கும் சக்திவாய்ந்த நுண்ணோக்கியின் மூலம் பரிசோதிக்க முடிவு செய்தார். இந்த முறையும் அவருக்கு கிடைத்தது முடிவு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஆதார் கார்டில் போட்டோ மாற்றுவது எப்படி? ஆன்லைன் அப்டேட் பண்ணலாம்!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ashu Ghai (@ashu.ghai)

பொதுவாக ஆற்று நீரை நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது அதில் பல வகையான கிருமிகளும் பாக்டீரியாக்களும் இருப்பது தெரியும். அந்த தண்ணீரை குடிப்பதால் அதில் உள்ள கிருமிகளும் நம் உடலுக்குள் நுழைகிறது. அந்த நபர் தனது வீட்டில் நுண்ணோக்கியின் கீழ் கங்கை நீரை வைத்தபோது, ​​​​அந்தத் தண்ணீரில் பாக்டீரியா அல்லது கிருமிகள் இல்லை. மருத்துவமனையில் உள்ள சக்திவாய்ந்த நுண்ணோக்கி லென்ஸ் மூலம் கங்கை நீரை ஆய்வு செய்ய வழங்கினார்.

முதலில் மருத்துவமனையின் சக்திவாய்ந்த லென்ஸ் மூலம் பரிசோதித்தபோது, ​​​​அங்குள்ள நிபுணர்களும் நீரில் கிருமிகள் எதையும் பார்க்கவில்லை. நான்கு நாட்கள் தண்ணீர் அப்படியே வைக்கப்பட்டிருந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு அதே மாதிரியை ஆய்வு செய்தபோதும், அதில் பூச்சிகள் எதுவும் இல்லை. ஆய்வக நிபுணர்களும், "இந்த தண்ணீரையும் குடிக்கலாம். கிருமிகள் ஏதும் இல்லை" என்று கூறியுள்ளனர்.

இதுபற்றி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ள அந்த நபர், கங்கை நீர் தூய்மையானது, கெட்டுப்போகாது என்று நம்பப்படுவது பொய் அல்ல என்று கூறியுள்ளார். வீடியோவைப் பார்த்த பலர் இது கங்கை நீரின் மகிமை என்று கூறியுள்ளனர். ஹரித்வாரில் உள்ள கங்கை நீர் குடிப்பதற்கு ஏற்றது அல்ல என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி இருப்பது கவனிக்கத்தக்கது.

காசிக்குச் செல்ல புதிய கங்கை ரயில் பாலம்! மகா கும்பமேளாவுக்கு முன் சூப்பர் சர்ப்ரைஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios