நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அதன் மூலம் அரங்கேறி வரும் தவறுகளும் அதிகமாகிக்கொண்டே இருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் கூட கூறப்பட்டது. 

இதனை உறுதி செய்யும் விதத்தில் பல அசம்பாவிதங்களும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து கொண்டு பழ வியாபாரி ஒருவர், அவரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த விஷயம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பழ வியாபாரம் செய்து வருபவர் நாகராஜ் என்கிற இளைஞர், அவ்வப்போது ஆட்டோ ஓட்டும் வேலையும் செய்து வந்துள்ளார். 

இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் முகநூல் மூலம் இளம் பெண் ஒருவர் அறிமுகமாகி உள்ளார், முதலில் அவரை தன்னுடைய காதல் வலையில் சிக்க வைத்தார் நாகராஜ். 

நாகராஜ் மீது கொண்ட அதீத காதல் காரணமாக அவரை பார்க்க வேண்டும் என்று அந்த பெண், திருப்பதி அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்துள்ளார். 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் தனிமையில் சந்தித்து தங்களுடைய காதலை வளர்த்து வந்துள்ளனர். இருவருக்கும் நெருக்கம் அதிகமானதால் நாகராஜ் கஷ்டம் என கூறி கல்லூரி மாணவி அணிந்திருந்த நகைகளை வாங்குவதையும், அவரிடம் இருந்து பணம் பெறுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லூரி மாணவியை திருப்பதிக்கு அழைத்து சென்று விடுதியில் அரை எடுத்து தங்கியுள்ளார். அப்போது மாணவிக்கு குளிர் பணத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததோடு,  நிர்வாணமான நிலையில் புகைப்படங்களும் எடுத்து வைத்துள்ளார்.

மயக்கம் தெளிந்ததும் நடந்ததை அறிந்த அந்த கல்லூரி மாணவி நாகராஜியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது நாகராஜ் அவரை நிர்வாணமாக எடுத்த புகைப்படங்களை காட்டி, தனக்கு 20 லட்சம் பணம் வேண்டும் என்று மிரட்டியுள்ளார். 

மேலும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த பெண் வருவதற்கு மறுத்தால் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். நாகராஜின் துன்புறுத்தல் அத்து மீறவே கல்லூரி மாணவி இந்த தகவலை தன்னுடைய உறவினரிடம் கூறி பெற்றோரிடம் தெரிவிக்குமாறு கூறினார்.

மாணவியை நிலையை புரிந்து கொண்ட அவருடைய பெற்றோரோ உடனடியாக இந்த சம்பவம் குறித்து ஆந்திர காவல் துறையினரிடம் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது போலீசார் நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.