Asianet News TamilAsianet News Tamil

#UnmaskingChina: ஆட்டத்தை ஆரம்பித்தார் மோடி.. சீன “ஆப்”களுக்கு செம ஆப்பு..! தடை செய்யப்பட்ட 59 ஆப்களின் லிஸ்ட்

இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட 59 சீன அப்ளிகேஷன்களின் முழு பட்டியலை பார்ப்போம். 
 

full list of 59 chinese mobile apps banned in india
Author
Delhi, First Published Jun 29, 2020, 9:45 PM IST

இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட 59 சீன அப்ளிகேஷன்களின் முழு பட்டியலை பார்ப்போம். 

கல்வான் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, சீனாவுக்கு வர்த்தக ரீதியான உறவில் கடிவாளம் போடுகிறது இந்திய அரசு. சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அதற்கு அதிகமான அளவில் சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யுமளவிற்கு, ஏற்றுமதி செய்யாததே காரணம். கல்வான் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை குறைப்பதற்கான முன்னெடுப்புகளை மோடி அரசு எடுக்க தொடங்கிவிட்டது. 

சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, சீன முதலீடுகளை பெறுவதில் கடும் கட்டுப்பாடுகள் என சீனாவிற்கு வர்த்தக ரீதியில் நேரடியாக சவாலளிக்க தொடங்கியுள்ளது இந்தியா.

full list of 59 chinese mobile apps banned in india

சீனாவின் உற்பத்திகளுக்கு மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்கிறது. அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில், சொந்த நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவில், உற்பத்தி செய்யப்படுவதில்லை. அதனால் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், மருந்து உற்பத்திக்கான மூல பொருட்கள் என பல விஷயங்களுக்கு நாம் சீனாவை சார்ந்திருக்கிறோம். இந்நிலையில், சீனாவை சார்ந்திருப்பதை தகர்த்தெறிய மோடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கிவிட்டார். 

அதன் ஒரு பகுதியாக சீனாவின் 59 மொபைல் அப்ளிகேஷன்களை இந்தியாவில் பயன்படுத்த இந்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சவாலளிக்கும் விதமாகவும், ஆப்களை பயன்படுத்தும் இந்தியர்களின் ரகசியங்களுக்கு பாதுகாப்பில்லாத 59 சீன அப்ளிகேஷன்களுக்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது. 

full list of 59 chinese mobile apps banned in india

டிக் டாக், ஹெலோ, ஷேர் இட், யூசி பிரவுசர், யூசி நியூஸ், வீ சாட், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் ஆப்களும் இதில் அடக்கம். இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த ஆப்களுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டிருக்கும் தடை, அந்த நிறுவனங்களுக்கு கடும் பின்னடைவையும் பொருளாதார ரீதியான கடும் பாதிப்பையும் ஏற்படுத்தும். 

இந்தியாவில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ள 59 சீன அப்ளிகேஷன்கள்:

1.    TikTok
2.    Shareit
3.    Kwai
4.    UC Browser
5.    Baidu map 
6.    Shein 
7.    Clash of Kings 
8.    DU battery saver 
9.    Helo 
10.    Likee
11.    YouCam makeup 
12.    Mi Community 
13.    CM Browers 
14.    Virus Cleaner 
15.    APUS Browser 
16.    ROMWE 
17.    Club Factory 
18.    Newsdog 
19.    Beutry Plus 
20.    WeChat 
21.    UC News 
22.    QQ Mail 
23.    Weibo 
24.    Xender 
25.    QQ Music 
26.    QQ Newsfeed 
27.    Bigo Live 
28.    SelfieCity 
29.    Mail Master 
30.    Parallel Space     31.    Mi Video Call – Xiaomi 
32.    WeSync 
33.    ES File Explorer 
34.    Viva Video – QU Video Inc 
35.    Meitu 
36.    Vigo Video 
37.    New Video Status 
38.    DU Recorder 
39.    Vault- Hide 
40.    Cache Cleaner DU App studio 
41.    DU Cleaner 
42.    DU Browser 
43.    Hago Play With New Friends 
44.    Cam Scanner 
45.    Clean Master – Cheetah Mobile 
46.    Wonder Camera 
47.    Photo Wonder 
48.    QQ Player 
49.    We Meet 
50.    Sweet Selfie 
51.    Baidu Translate 
52.    Vmate 
53.    QQ International 
54.    QQ Security Center 
55.    QQ Launcher 
56.    U Video 
57.    V fly Status Video 
58.    Mobile Legends 
59.    DU Privacy
 

Follow Us:
Download App:
  • android
  • ios