Asianet News TamilAsianet News Tamil

#UnmaskingChina: இனி சீனாவிற்கு மரண பயத்தை காட்டப்போகும் இந்தியா... ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பு..!

சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 

full freedom to deal with Chinese aggression along LAC..Defence minister
Author
Delhi, First Published Jun 21, 2020, 4:58 PM IST

சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்கியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், கல்வான் பள்ளத்தாக்கு முழுவதும் தங்களின் பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கிடையே, 2ம் உலகப் போரில் ரஷியா வெற்றி பெற்றதன் 75ம் ஆண்டு வெற்றி தினம் ஜூன் 24ல் மாஸ்கோவில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள்கள் அரசுப் பயணமாக நாளை மாஸ்கோ புறப்படுகிறார்.

full freedom to deal with Chinese aggression along LAC..Defence minister

அதற்கு முன்னதாக சீன எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பாகிஸ்தானுடனான எல்லைப் பாதுகாப்பு குறித்தும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் விமானம், ராணுவம், கப்பல் ஆகிய முப்படை தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

full freedom to deal with Chinese aggression along LAC..Defence minister

அப்போது ராஜ்நாத் சிங் கூறுகையில், எல்லையில் இந்திய படைகள் தயார் நிலையில் உள்ளன. லடாக் எல்லையில் சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்தியப் படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லையில் சீன படைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு ராணுவ உயரதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios