From the India Gate: கலக்கத்தில் உள்ள அரசியல் குடும்பம் முதல் கேரள அரசு கொடுத்த ஷாக் வரை.. அரசியல் கிசுகிசு

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இதோ உங்களுக்கான 9வது எபிசோட்.

From the India Gate: troubled political family to the shock given by the Kerala government

உற்று நோக்கப்படும் அந்த முகம்

ஒரு காலத்தில் வரலாற்று உதவிப் பேராசிரியராக இருந்த ராஜ்யசபா எம்.பி., மத்தியப் பிரதேசத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) முக்கிய நபராக இருந்து வருகிறார். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இந்த இளம் முகம், தலைமைத்துவ திறன்களுடன் இருப்பதோடு மட்டுமில்லாமல், சிறந்த  பேச்சு திறன் கொண்டவராகவும் இருக்கிறார். 

மத்தியப் பிரதேச தேர்தலுக்கு முன்னதாக அவர் மத்திய அமைச்சரவை பதவிக்கு பரிசீலிக்கப்படலாம் என்று ஊகங்கள் கிளம்பியுள்ளது. பழங்குடியினர் ஆதிக்கம் நிறைந்த மேற்கு மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு சிறப்பாக இந்த தலைவரால்  செயல்பட முடியும் என்று நம்பப்படுகிறது. பழங்குடியின வாக்காளர்கள் மாநிலத்தின் மக்கள் தொகையில் 21 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..From the India Gate: அமித் ஷாவை பார்த்தால் தெரியாது...ஆனால் அமைதியாக பஞ்சாயத்து செய்துவிடுவாராம்!!

மொழிபெயர்ப்பாளர்கள் தேவை

வட இந்திய தலைவர்களின் பேச்சுக்களை கன்னடத்தில் மொழிபெயர்க்கும் திறன் கொண்ட கட்சி சகாக்களை கண்டுபிடிப்பதில் இரண்டு தேசியக் கட்சிகளுக்கும் தலைவலியாகி இருந்து வருகிறது. கர்நாடகா வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற பாஜக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சார்ந்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியோ காந்தி குடும்பத்தை நம்பியுள்ளது. 

ஆனால் இரு கட்சிகளாலும் பணியமர்த்தப்படும் மொழி பெயர்ப்பாளர்கள் அந்தந்த தலைவர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் உணர்ச்சி வசப்பட்டு என்ன சொல்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதில் தவறி விடுகின்றனர். காங்கிரஸின் 'நா நாயகி' (மகளிர் மாநாடு) மாநாட்டின்போது சமீபத்திய ஒரு சம்பவம் நடந்தது. அங்கு பிரியங்கா காந்தியின் பேச்சை லட்சுமி ஹெப்பல்கர் மொழிபெயர்த்தார். அவரின் முக்கிய பேச்சை அடியொட்டி சொல்லாமல், அதிலிருந்து தவறி வேறு எங்கோ சென்றுவிட்டார்.

இதேபோல் பாரத் ஜோடோ யாத்ராவின்போது, தரம் சிங்கின் மகன் அஜய் சிங் மற்றும் நாகராஜ் யாதவ் ஆகியோர், மொளகல்மூர் மற்றும் தாவங்கரேயில், தங்கள் சொந்த பேச்சுகளை பேச துவங்கினர். இதனால் அங்கிருந்த கூட்டத்தினர் குழப்பமடைந்தனர். ஒரு கட்டத்தில், தனது மொழிபெயர்ப்பாளரை ராகுல் காந்தி கட்டுப்படுத்த வேண்டியிருந்த தர்மசங்கடமான சூழ்நிலையும் ஏற்பட்டது.

அமித்ஷாவின் மாண்டியா வருகையின் போது பாஜகவிலும் தர்மசங்கடமான தருணமாக மாறியது. அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி போடப்பட்டதா? என்று அமித்ஷா பார்வையாளர்களிடம் கேட்டார். ஆனால் அவர்கள் அனைவரும் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தார்களா? என்று மொழிபெயர்ப்பாளர் கூற குழப்பம் ஏற்பட்டது.

கேரளா துருப்பு சீட்டு

குடியரசு தின அணிவகுப்பு என்று வரும்போது, கேரளாவின் டுவிஸ்ட்டும் நினைவுக்கு வரும். கடந்த ஆண்டு கூட சமூகம் சார்ந்த செய்திகள் அணிவகுப்பில் இடம் பெறாத காரணத்தால் கேரளாவின் அணி வகுப்பு நிராகரிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிடித்த மாதிரி ஒரு கருத்தை பரிந்துரைத்து அவரது மனதில் இடம் பிடிக்க முயற்சித்துள்ளது.

கர்தவ்யா பாதையில் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இருபத்தி நான்கு பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி அரங்கேற இருக்கிறது. களரிப்பாட்டு மற்றும் மேளம் தவிர, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடியில் செயல்படும் கோத்ர கலாமண்டலத்தின் கலைஞர்கள் பங்குபெறும் நிகழ்ச்சி, பழங்குடியினரின் பாடல்கள் மற்றும் நடனங்கள் இந்த முறை இடம் பெறும் என்று கூறப்படுகிறது.

சிறந்த பெண் குரலுக்கான தேசிய விருது பெற்ற நஞ்சம்மா தலைமையில் களம் காண உள்ளது. இது பிரதமரின் செல்லப்பிள்ளை திட்டங்களான 'பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ', 'உஜ்வாலா யோஜனா' 'நாரி சக்தி' ஆகியவற்றுடன் நிச்சயம் கேரளாவின் நடப்பாண்டு அணிவகுப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

சிறிய திருத்தம்

மத்தியப் பிரதேசம் மாநில பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாகவே அமைச்சரவை மாற்றத்தைக் காணும் என எதிர்பார்க்கப்படுவதாக வதந்திகள் பரவி வருகிறது. 'மாமா' ஜி முதலமைச்சராக பதவியைப் பெறுவதற்கு போதுமான அளவு செய்திருக்கலாம் என்றாலும், பாஜக ஆறு - ஏழு அமைச்சர்களை கழற்றிவிட்டு, புதிய முகங்களை அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. புதிய முகங்களை அறிமுகப்படுத்துவதன் பின்னணியில் ஒரு ரகசியம் உள்ளது.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை புதிய அமைச்சரவையுடன் தேர்தல் களத்தில் நுழைய வைப்பதையும், பதவிக்கு எதிராக இருப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் இது உதவும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க..From the India Gate : அழகான முதல்வர் வேட்பாளர் முதல் ஆயுர்வேத ரிசார்ட் சர்ச்சை வரை - அரசியல் சலசலப்பு !!

கலக்கத்தில் ராயல்ஸ்

'ராயல்ஸ்' சிவப்பு கம்பளத்திற்கு மிகவும் பழகிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலும் அவர்கள் கட்சி தொண்டர்களை தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள்.  அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பாஜகவில் சேர்ந்து, முக்கிய இடத்தைப் பிடித்ததிலிருந்து, அவர் மீதும் குற்றம்சாட்டப்படுகிறது.  

கடந்த ஆண்டும், 'உயர்ந்த' தலைவர் மற்றும் ஆதரவாளர்கள் தங்களை அவமரியாதை செய்வதைக் கண்டித்து, உள்ளூர் பாஜக நிர்வாகிகள் கட்சி தலைமையகத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பினர். இந்த விவகாரம் மூடிமறைக்கப்பட்டாலும், மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் வர இருப்பதால், மீண்டும் அதிருப்தி பூதாகரமாக வெடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஜாமீன் முக்கியம்

சமூக வலைதளங்களில் துஷ்பிரயோகம் செய்வது அனைத்து அரசியல் கட்சிகளின் வழக்கமாகிவிட்டது. உ.பி.யில் உள்ள சோட்டா  நேதாஜிக்கு எதிராக ஒரு பெண் அரசியல்வாதி கருத்துக்களை வெளியிட்டார். அந்தப் பெண் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் விரைவில் பெண் தலைவரை கைது செய்ய வேண்டாம் என்று போலீசாருக்கு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.

ஆனால் அது அரசியல் நிர்ப்பந்தத்தால் நடந்ததே தவிர நேதாஜியின் பெருந்தன்மையால் அல்ல என்பது மக்களுக்குத் தெரியும். மேலும், அந்த பெண் தனது கட்சியின் சமூக ஊடகத்தால் தொடங்கப்பட்ட தளத்தில் இருந்து பதிலடி கொடுதடு இருக்கிறார் என்று அவரிடம் கூறப்பட்டது. சரியான நேரத்தில் ஜாமீன் எடுப்பதும் ஒரு அரசியல் தந்திரம் தான்.

கொந்தளித்த அதிகாரி

ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் சில மணி நேரங்களுக்குள் இரண்டு சம்பவங்களில் சிக்கினார். அவரது கட்சியின் சமூக ஊடகத் தலைவர் கைது செய்யப்பட்டதையடுத்து, காவல்துறை தலைமையகத்திற்கு வந்தார் அகிலேஷ் யாதவ். அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட டீயையும் மறுத்தார். ஒரு சில மணி நேரங்களுக்குள், மற்றொரு வீடியோ வெளிவந்தது, அங்கு அந்த அதிகாரி ஒரு பத்திரிகையாளரின் வேலையை செய்ய விடாமல் தடுத்துள்ளார். பிறகு சரியான பதிலடி ஊடகங்கள் வாயிலாக கொடுக்கப்பட்டது. நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்த பின்னரே ஊடகங்களின் கோபம் தணிந்தது.

இதையும் படிங்க..From the India Gate: இவருக்கு முடி நரைத்தாலும் பதவி ஆசை விடலை; தேவ கவுடா குடும்பத்தில் போட்டா போட்டி!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios