வயநாட்டில் இப்படின்னா; கர்நாடகாவுல வேற மாதிரி; கூட்டத்துக்கு வரணும்ன்னா அலவன்ஸ் வேணுமாம்!!
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 19வது எபிசோட்.
கர்நாடகாவிலும் பணம்தான் பேசும்
இன்று அரசியல்வாதிகள் செல்லும் இடங்களுக்கு மக்கள் வருகிறார்களோ இல்லையா? மனிதவள மேம்பாட்டு துறையினர் என்ன செய்கிறார்களோ அதையே அரசியல்வாதிகளும் செய்யத் துவங்கிவிட்டனர். எல்லா அரசியல்வாதிகளும் தங்களின் புகழுக்காக பெரும் கூட்டத்தை திரட்ட விரும்புகின்றனர். தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் கர்நாடகா மாநிலத்திலும் இதுதான் நடக்கிறது.
பேரணிகள் மற்றும் பிரச்சாரங்களில் கலந்து கொள்வதற்காக அனைத்துக் கட்சிகளும் தங்களது தொண்டர்களுக்கு பணம் வழங்குகின்றனர் என்பதில் சந்தேகமில்லை. இது ஒரு ரகசியமும் இல்லை. ஆனால் பெல்காம் மாவட்டத்தில் நடந்த பேரணியால் அமைப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தேர்தல் பிரசாரத்துக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மூத்த தலைவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பயணத்திட்டத்தில் பல தொடர்ச்சியான திட்டங்களைத் திட்டமிடுகின்றனர். மேலும் ஒரு இடத்தில் கூட்டம் தாமதமானால், அடுத்தடுத்த பேரணிகளும் தாமதமாகும்.
அப்படித்தான், பெல்காமிற்கு பிற்பகல் வர வேண்டிய தலைவர்கள் மாலை வரை வராததால் அனைத்து திட்டங்களும் வீணாகின.
இது பிரச்சனையே இல்லை. ஆனால், மதியம் நடக்கும் கூடத்திற்கு மட்டும் பணம் கொடுத்து இருந்ததால், இரவு நடந்த கூட்டத்தில் இவர்கள் கலந்து கொள்ளவில்லை. கலைந்து சென்றனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் இரவு நேரத்தில் தங்கி கூட்டத்தை கவனிக்க வேண்டுமானால், கூடுதல் பணம் (அலவன்ஸ்) கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதாம்.
உள்ளூர் தலைவர்கள் இவர்களை தடுக்கத் தவறியதால், கூட்டமே இல்லாமல் காலி இருக்கைகள் மட்டுமே இருந்துள்ளன. இது தலைவர்களை எரிச்சல்படுத்தியுள்ளது.
இதையடுத்து, நேரம் நீடிக்கப்பட்டால், கால தாமதம் ஏற்பட்டால் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாம். நல்ல ஜனநாயகம்ப்பா...வாழ்க ஜனநாயகம்.
இது குப்பை அரசியல்
கேரளாவில் ஆளும் மற்றும் எதிர்கட்சியினரை இந்த விஷயம் ஒருங்கிணைத்ததாகத் தெரிகிறது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரத்தில் குப்பை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் ஒப்பந்தத்தில் மூத்த இடதுசாரி தலைவர்களின் உறவினர்களின் பங்கை இந்தியா கேட்டில் ஏற்கனவே இரண்டு முறை எழுதப்பட்டுள்ளது. சி.பி.எம் தலைவரின் மருமகன் பெற்ற முக்கிய காண்டிராக்ட்டை காங்கிரஸ் தலைவரின் மருமகனுக்கு சப் கான்ட்ராக்ட் ஆக வழங்கப்பட்டதாம். இதற்கு முக்கிய சிபிஎம் தலைவரின் மருமகன் துணை போனாராம். எல்லாமே மருமகன்களின் கை தான் ஓங்கியுள்ளது.
குப்பை அகற்றுவதற்கான பேரம் மற்றும் மருமகன்களின் பங்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பா.ஜ.க. குரல் எழுப்பி வருகிறது. குப்பைக் குவியல்கள் போல இந்த பேரத்திலும் பல அடுக்கு ஊழல்கள் இருக்கும்போல என்று கிசு கிசுக்கப்படுகிறது.
வயநாட்டில் பிரியங்கா வத்ரா
கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி (முன்னாள் எம்.பி. ராகுல் காந்தியின் தொகுதி) விரைவில் வழி-நாடு என்று பெயர் மாற்றப்பட வேண்டும்.
ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தீர்ப்பில் உள்ள சட்ட நுணுக்கங்களை கேரளாவில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் முழுமையாக புரிந்து கொள்வதற்கு முன்பே, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் பிரியங்கா காந்தி வதேரா போட்டியிட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
காந்தி குடும்பத்தினரின் பாரம்பரிய தொகுதியாக இருந்த அமேதியில் ராகுல் காந்தி தோற்பது உறுதி என்று அறிந்த பின்னர் கடைசி நிமிடத்தில் வயநாட்டில் ராகுல் களமிறங்கி இருந்தார். இந்த தொகுதியில் போட்டியிட நிறுத்தப்பட்டு இருந்த காங்கிரஸ் தலைவர் டி சித்திக் பிரச்சாரத்தையே துவக்கி விட்டார். திடீரென ராகுல் காந்தி களத்தில் இறக்கப்பட்டார். இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் சித்திக்கிற்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளித்து இருந்தது. அவரும் வெற்றி பெற்றார்.
ராகுலின் வருகை காங்கிரஸ் கட்சிக்குள் உண்மையில் சண்டையிட்டுக் கொண்டு இருந்த பிரிவுகளை ஒன்றிணைத்துள்ளது. வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வத்ரா நிறுத்தப்பட்டால், அவர் வெற்றி பெறுவது உறுதி. காங்கிரஸ் கட்சி சார்பில் அவர் மக்களவைக்குள் செல்வதும் உறுதியாகும். காந்தி குடும்பத்திற்கும் பாதுகாப்பான தொகுதியாக வயநாடு இருக்கும். இதனால் மீதமுள்ள 19 இடங்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் கேரளா காங்கிரஸ் போட்டியிட வேண்டும். இது வயநாடு வழியாக நாடாளுமன்றத்துக்குள் காங்கிரஸ் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுதான் அகிலேஷ் ரகசியம்
ராம்சரித்மனாஸ் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த ஒரு முக்கிய தலைவரை கட்சியில் இருந்து அகிலேஷ் யாதவ் நீக்குவார் என்று உத்தரப்பிரதேச அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்பார்த்தனர்.
முரண்பாடாக, நேதாஜியை எதிர்த்த சிலர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் தலைவர்களையும், கட்சி தொண்டர்களையும் குழப்பமடையச் செய்துள்ளது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வாக்குகளை கவரும் அரசியல் உத்திதான் இது என்று ரகசியம் உடைந்துள்ளது.
இந்து-முஸ்லிம் வாக்கு வங்கிகளை அதிகமாக சார்ந்திருப்பதால் கட்சி ஏற்கனவே நிறைய பாதிக்கப்பட்டுள்ளதாம். ஆதலால், அதிக வாக்குகளை பெறுவதற்காக நேதாஜி பக்கம் அகிலேஷ் சாய்ந்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த உத்தி கட்சியை முன்னோக்கி கொண்டு வருமா அல்லது பின்னோக்கி தள்ளுமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
வெள்ளைக் கொடி
தமிழகத்தில், முதல்வர் முக ஸ்டாலின் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்துவதில் பிரதான கட்சியாக பாஜக இருப்பதால், எதிர்க்கட்சியாக அது வளர்ந்து வருகிறது.
2026ல் மாநிலத்தில் ஆட்சியமைப்போம் என்று பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் கூறிவரும் நிலையில், இது இலைக் கட்சிக்கு பேரிடியாக இருக்கிறது. இலைக் கட்சியை வைத்து தமிழ்நாட்டில் தாமரை கட்சி வளருகிறது என்ற கூக்குரல் எழுந்துள்ளது. எங்கு என்றுதானே கேட்கிறீர்கள். இலையின் செயற்குழு கூட்டத்தில் தான். பலரும் போர்க்கொடி உயர்த்தினராம்.
இதை முறியடிக்கும் வகையில், பாஜகவில் இருந்து சிலரை இழுத்து நாங்கள் யார் என்பதை இலைக் கட்சி சொல்லாமல் சொல்லி வருகிறது. இது இரண்டு கட்சிக்கும் இடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூட்டணியை முறித்துவிடுவதாக மிரட்டிய போதிலும், அவரது கட்சி சகாக்கள் அறிவுரை கூறி அவரை அமைதியாக இருக்கும்படி கூறியதாகத் தெரிகிறது.
தேசியத் தலைமையும் இதைத்தான் எதிரொலித்ததாம். தீர்வுக்காக அவர் டெல்லிக்கு விரைந்தபோது அறிவுரை கூறப்பட்டதாகத் தெரிகிறது. தேசிய தலைமை மாநிலத் தலைவரின் பேச்சை கேட்கவில்லையாம். அதனால், சென்னையில் இறங்கிய தலைவர் வெள்ளைக் கொடியை அசைத்துள்ளார்.
ஹாசனில் குடும்ப அரசியல்
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜகவின் பிரீதம் கவுடா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதியை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் முயற்சிக்கிறது. ஆனால், தகுதியான வேட்பாளரை நிறுத்துவதில் திணறி வருகிறதாம்.
4 முறை இத்தொகுதியில் வெற்றி பெற்ற மறைந்த எம்எல்ஏ ஹெச்.எஸ்.பிரகாஷின் மகனும், உள்ளூர் தலைவருமான ஸ்வரூப் பிரகாஷுக்கு சீட்டு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஸ்வரூப்புக்கு கட்சி தலைவர் எச்டி குமாரசாமியின் ஆதரவு உள்ளதாம். ஆனால், இந்த தொகுதியில் தேவகவுடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா, தனது மனைவி பவானியை வேட்பாளராக நிறுத்த முயற்சித்து வருகிறாராம்.
தற்போது முடிவு தேவகவுடா மைதானத்தில் உள்ளது. அவருடைய ஆசிதான் வேட்பாளரை தீர்மானிக்குமாம். மருமகள் பவானியை விட தேவகவுடா ஸ்வரூப்பிற்கு ஆதரவாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.
1991ல் அவரை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுத்தது ஹாசன் தொகுதி. ஸ்வரூப்பை விட மருமகளுக்கு முன்னுரிமை கொடுப்பது அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்று நினைக்கிறாராம். கட்சிக்குள், குடும்பத்திற்குள் அடுத்த கட்ட நாடகம் துவங்கிவிட்டது என்று கிசு கிசுக்கின்றனர்.
மேலும் படிக்க:From the india gate: பெண்டிங்கில் கிடக்கும் பைல்கள்.. கர்நாடகா தேர்தலில் புது பார்முலா - அரசியல் கிசுகிசு !!
From the India Gate: ராஜஸ்தான் ராஜா ராணி போட்டியும் கர்நாடக தேர்தல் வியூகங்களும்