from July GSTIN Number will be noted
ஜூலை முதல் ‘ஜி.எஸ்.டி.ஐ.என்’ எண்ணை குறிப்பிட வேண்டும்….ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு அரசு உத்தரவு
ஜூலை 1-ந்தேதி முதல் நாட்டில் உள்ள ஏற்றுமதியாளர்களும், இறக்குமதியாளர்களும் ஜி.எஸ்.டி. அடையாள எண்ணான, ‘ஜி.எஸ்.டி.ஐ.என்.’(GSTIN) எண்ணை தங்களின் வர்த்தகத்தில் குறிப்பிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 1-ந்தேதி முதல் நாடுமுழுவதும் ஒரே வரியான சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வருகிறது. அதற்கான வரி வீதங்கள் அனைத்தும் ஏறக்குறைய மத்தியஅரசு முடிவு செய்துவிட்ட நிலையில், இன்னும் சில பொருட்களுக்கான வரிவீதங்களை மட்டும் ஜி.எஸ்.டி. கவுன்சில்முடிவு செய்ய இருக்கிறது. இதற்கான அடுத்தகட்ட கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
இதற்கிடையே நாட்டில் ஏற்றுமதி, மற்றும் இறக்குமதியில் ஈடுபடும் வர்த்தகர்களும் ஜி.எஸ்.டி. வரிமுறைக்குள் வரும் விதத்தில் அவர்களுக்கு ஜி.எஸ்.டி. அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. அந்த எண்ணை ஜூலை 1-ந்தேதி இரவு முதல் குறிப்பிட வேண்டும்.
இது குறித்து மத்திய வருவாய் துறை நேற்று வௌியிட்ட அறிவிப்பில் கூறுகையில், “ நாட்டில் உள்ள ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள் அனைவரும் ஜூலை 1-ந்தேதி இரவு 12 மணி முதல் தங்களின் பில்களில் ஜி.எஸ்.டி. அடையாள எண்ணை குறிப்பிட வேண்டும். ஏற்றுமதி, இறக்குமதி அடையாள எண், பான் எண் குறிப்பிட வேண்டும்.
வரி செலுத்துவோர்கள் குறித்த பதிவுகளை பதிவு செய்யும், ஜி.எஸ்.டி.என்.போர்டல் கடந்த ஏப்ரல் 30-ந்தேதியோடு நிறுத்தப்பட்டது. அது மீண்டும் ஜூன் 1ந்தேதி முதல் 15 நாட்களுக்கு செயல்படும். அப்போது தேவைப்படும் நபர்கள் இதை அப்டேட் செய்து கொள்ளலாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
