நாடு முழுவதிலும் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுங்கச்சாவடிகளை கடந்த செல்லும் நிலை தற்போது நிலவுகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு  'பாஸ்டேக்' முறையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. இதனால்  வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. 

ஆர்.எப்.ஐ.டி எனப்படும் ரேடியோ கதிர் டெக்னாலஜி மூலமாக இந்த'பாஸ்டேக்' செயல்படும். இதன்படி வாகனங்களுக்கான குறியீட்டு அட்டையை பெற்று குறிப்பிட்ட தொகையை அதில் ரீசார்ஜ் போல செய்து கொள்ள வேண்டும்.

இதன் பின்னர் ஒவ்வொரு டோல் கேட்டிலும் அந்த குறியீட்டைபி பயன்படுத்தி அதற்கான கட்டணத்தை தானாகவே எடுத்துக்கொள்ளும். பின்னர் தேவைப்படும்போது இணையதளம் மூலமாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் இது நாடு முழுவதுமாக அமலுக்கு வருகிறது. விரைவில் பெட்ரோல் பங்குகளிலும் இந்த திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.