இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் ஹோலி பண்டிகை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு மீண்டும் ஏழை குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை 2021 ஏப்ரல் மாதம் அறிவித்தது.

இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஒரு நபருக்கு 5 கிலோ கூடுதல் உணவு தானியங்களை (அரிசி அல்லது கோதுமை) ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக வழங்கியது. இப்போது இந்த திட்டத்தை மேலும் மத்திய அரசாங்கம் நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தை பற்றி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்ராம்பூரில், சரயு கால்வாய் தேசியத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'இந்த கொரோனா காலத்தில் எந்த ஒரு ஏழையும் பசியோடு தூங்கக் கூடாது என்பதற்காக தீவிரமாக உழைத்தோம். இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் ஹோலி பண்டிகை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.