மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், இளைஞர்களுக்கு செல்போன்களில் பயன்படுத்தும் வகையில் இலவச டாக்டைம், இன்டர்நெட் வசதியைஅளிக்கும் திட்டத்தை கோவா அரசு இன்று தொடங்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இது குறித்து கோவா முதல்வர் லட்சுமி காந்த் பர்சேகர் கூறுகையில், “ கோவா யுவா சஞ்சார் யோஜனா’’ எனும் திட்டம் நாளை(திங்கள்கிழமை) அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி, 16 வயது முதல் 30 வயதுள்ள இளைஞர்களுக்கு செல்போன்களில் பயன்படுத்தும் வகையில் இலவச இன்டர்நெட் சேவை, 100 நிமிடங்கள் பேசும் வகையில் டாக் டைம் வழங்கப்படும்.

இதற்காக வோடபோன் நிறுவனத்துடன் அரசு, ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டம் மூலம் மாநிலத்தில் 1.25 லட்சம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியாதிட்டத்ைத முன்னெடுக்கும் வகையில் இந்த திட்டத்துக்கு கடந்த மாதம் 25-ந்தேதி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்தை எந்த இளைஞராவது தவறாகப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், அவருக்கு இந்த திட்டம் ரத்து செய்யப்படும்'' எனத் தெரிவித்தார்.