Free dhoti sari sold in Kerala - Shocked devotee

திருவனந்தபுரம், பத்பநாபசுவாமி கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் தேவஸ்தான கடையில் வேட்டி வாங்க சென்ற போது, அங்கு தமிழ்நாட்டின் இலவச வேட்டி சேலை ரூ.90 க்கு விற்கபடுவதை கண்டு அதிர்ச்சியுற்றார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு என்பது வழக்கத்தில் உள்ளது.

அதன்படி ஆண் பக்தர்கள் வேட்டி மற்றும் துண்டு மட்டுமே அணிந்து வரவேண்டும். பெண் பக்தர்கள் சேலை மட்டுமே அணிந்து வரவேண்டும்.

இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் குறிப்பிட்ட ஆடைகளைத் தவிர மற்ற ஆடைகள் அணிந்து வந்தால் அவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

மேலும் பத்மநாப சுவாமி கோயிலுக்கு வெளி மாநிலத்தில் இருந்து வரும் ஆண்களும் பெண்களும் அவர்களுக்கு ஏற்றார்போல் உடை அணிந்து வருவதால் கோயிலுக்குள் அனுமதிக்கபடாமல் தடுக்கப்பட்டு வந்தனர்.

இதனால் கோவிலுக்கு வேளியே அங்கீகரிக்கப்பட்ட ஆண்களுக்கு வேட்டி மற்றும் துண்டும் பெண்களுக்கு சேலையும் விற்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ஆடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு விலக்கிக்கொள்ளப்படுவதாக, கோயிலின் நிர்வாக அதிகாரி அறிவித்தார். ஆனால் அதற்கு அங்குள்ள இந்து இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலுக்கு வரும் பெண்கள் சுடிதார், சல்வார் அணிந்து வர அதிரடியாகத் தடை விதித்து உத்தரவிட்டார். 

இந்நிலையில், கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் தேவஸ்தான கடையில் வேட்டி வாங்க சென்ற போது, அங்கு தமிழ்நாட்டின் இலவச வேட்டி சேலை ரூ.90 க்கு விற்கபடுவதை கண்டு அதிர்ச்சியுற்றார்.

திருவனந்தபுரம், பத்பநாபசுவாமி கோயிலில் தமிழக அரசின் விலை இல்லா வேட்டி படு ஜோராக விற்பனை செய்யப்படுவது வேதனை அளிப்பதாகவும், தமிழக ஏழை எளிய மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவது வாடிக்கையாகி விட்டது எனவும் அந்த பக்தர் வருத்தம் தெரிவித்தார்.