France India to cooperate in fighting climate change
வரும் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு, குடியரசு தலைவர் தேர்தல் முடிந்தபின், மத்திய அமைச்சரவையை மாற்ற பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
3-ம் ஆண்டு
பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை 2 முறை அமைச்சரவையை பிரதமர் மோடி மாற்றியமைத்துள்ளார்.
2019ம் ஆண்டு தேர்தல்
இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தபின், அடுத்து வரும் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு சிலரை கட்சிப்பணிக்கு அனுப்பி தேர்தல் பணிகளை கவனிக்கும் வகையில் அமைச்சரவையை மாற்றம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்றில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு துறை
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த மாதம் 14-ந்தேதி தனது கோவா முதல்வராக பதவி ஏற்றார். இதனால், அவர் வகித்த பாதுகாப்பு துறையை ராஜினாமா செய்ததையடுத்து அதை கூடுதலாக நிதி அமைச்சர் அருண்ஜெட்லி வகித்து வருகிறார்.
அமைச்சர் மரணம்
இதேபோல, சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த அணில் மாத்வ் தவே கடந்த மாதம் 18-ந் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவர் இறப்புக்கு பின் அந்த துறையின் பொறுப்பு அமைச்சர் ஹர்ஸ் வர்தனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
76வயதுக்கு மேல்...
மேலும், மோடியின் அமைச்சரவையில் 76 வயதுக்கு உட்பட்டவர்களே அமைச்சர்களாக வகிக்க முடியும். அந்த வகையில், சிறு, குறுந்தொழில் துறை அமைச்சராக இருக்கும் கல்ராஜ் மிஸ்ராவுக்கு வரும் ஜூலை மாதத்தோடு 76 வயது நிறைவடைகிறது. ஆதலால், அவரின் பதவியும் பறிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
3 அமைச்சர்கள் பதவி
இதனால், ஏறக்குறைய 3 அமைச்சர்கள் பதவி காலியாவதையொட்டி, அமைச்சரையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும், ரெயில்வே துறை அமைச்சராக இருக்கும் சுரேஷ் பிரபு பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன.
ரெயில்வேக்கு புதிய அமைச்சர்
சுரேஷ் பிரபுவிடம் இருக்கும் ரெயில்வே துறை மனோஜ் சின்காவுக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனோஜ் சின்கா தற்போதுரெயில்வே துறை இணை அமைச்சராக இருக்கிறார். அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு சுரேஷ் பிரபுவின் இடத்தில் அமர்த்தப்படலாம். மேலும், சுற்றுச்சூழல் துறைக்கும் புதிய அமைச்சர் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
பதவி பறிப்பா?
இதற்கிடையே, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அமைச்சர் உமா பாரதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. இது குறித்து பிரதமர் மோடி முடிவு எடுப்பார் எனத் தெரிகிறது. குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்ட ஒருவர் அமைச்சர் பதவியில் நீடிக்க கூடாது என்று என பிரதமர் மோடி கருதினால்,உமா பாரதி பதவி பறிக்கப்படலாம்.
