தெலங்கானாவின் விக்காராபாத் மாவட்டத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பேருந்து ஒன்று சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர், 17 பேர் காயமடைந்தனர்.

தெலங்கானாவின் விக்காராபாத் மாவட்டத்தில் உள்ள பரிகி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரிக்கும் பேருந்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர், மேலும் 17 பேர் காயமடைந்தனர். ஷாபாத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, லாரி மீது மோதியதில் திங்கட்கிழமை அதிகாலை 1:45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். 

விக்காராபாத் காவல் கண்காணிப்பாளர் கே. நாராயண ரெட்டி கூறுகையில், “இந்த விபத்து இன்று அதிகாலை 1:45 மணியளவில் சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரிக்கும் பேருந்துக்கும் இடையே நிகழ்ந்தது. ஷாபாத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்து மக்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். நான்கு பேர் இறந்தனர், மேலும் 17 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர், மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மாற்றப்பட்டன.”