முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சரணடைவதில் இருந்து உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை எதிர்த்து பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு செய்தார். பிப்ரவரி 7-ம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தற்போது உச்சநீதிமன்றம் விளக்கு அளித்துள்ளது. 

தமிழ்நாடு-கர்நாடகா மாநில எல்லைப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனையை எதிர்த்து போராட்டம் கடந்த 1998-ல் நடைபெற்றபோது, பேருந்துகள் மீது கல் வீசியதாக தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.
 
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் வெளியானது. அதில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பிப்ரவரி மாதம் 7-ம் தேதிக்குள் அவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, பாலகிருஷ்ண ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

தனக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம். பாலகிருஷ்ண ரெட்டி சரணடைவதில் இருந்து அதிரடியாக விலக்கு அளித்துள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு கலங்கம் ஏற்படுமோ என்று எடப்பாடி பழனிச்சாமி சோகத்தில் இருந்த வந்த நிலையில், இந்த நீதிமன்ற உத்தரவு அவருக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.