முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உரை நிகழ்த்துவதில் வல்லவர். மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்று வாஜ்பாய் ஆற்றிய உரை இன்றும் பலரால் பேசப்பட்டு வருகிறது. பாரதிய ஜன சங்க நிறுவனர் ஷ்யாம பிரசாத் மொகர்ஜி ஒருமுறை காஷ்மீர் கிளம்பினார். அவரது உதவிக்காக வாஜ்பாய் சென்றார். முன்பதிவு இல்லாமல் ரயிலில் கிளம்பினார்கள்.

ஆனால் அரசோ மொகர்ஜியை கைது செய்ய உத்தரவிட்டது. காஷ்மீரை ஏன் இந்தியாவோடு முழுமையாக இணைக்க வேண்டும் என்ற தனது நோக்கத்தை வாய்பாயிடம் சொல்லி அனுப்பினார். வார்த்தைகளை வேத வாக்காக கொண்டு இந்தியா முழுக்க வாஜ்பாய் சுற்றினார். 

பல இடங்களில் உரை நிகழ்த்தினார். அனல் பறந்த பேச்சுகள் அவை. பலரும் இந்த விவகாரத்தை கவனிக்க தொடங்கினார்கள். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்கு சென்றார். முதல் உரையிலேயே காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தார். அந்த உரையை கண்டு அனைவரும் வியந்தனர்.  அனைத்து மக்களவை உறுப்பினர்களும், கட்சி பேதமின்றி வாஜ்பாயை பாராட்டினார்கள்.