Asianet News TamilAsianet News Tamil

வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்....எய்ம்ஸ் மருத்துவமனை மீண்டும் அறிக்கை!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது என எய்ம்ஸ் மருத்துவமனை மீண்டும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. உயிர்காக்கும் கருவிகள் மூலம் வாஜ்பாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Former Prime Minister Atal Bihari Vajpayee's condition continues to remain the same. He is critical and on life support systems: AIIMS statement
Author
Delhi, First Published Aug 16, 2018, 11:34 AM IST

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது என எய்ம்ஸ் மருத்துவமனை மீண்டும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. உயிர்காக்கும் கருவிகள் மூலம் வாஜ்பாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 93 வயதாகும் பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வில் இருந்து வருகிறார். Former Prime Minister Atal Bihari Vajpayee's condition continues to remain the same. He is critical and on life support systems: AIIMS statement

இந்நிலையில் திடீர் உடல்நிலைக் குறைவு காரணமாக ஜூலை 11-ம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் வாஜ்பாய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.Former Prime Minister Atal Bihari Vajpayee's condition continues to remain the same. He is critical and on life support systems: AIIMS statement

இதனையடுத்து அவரது உடல் நிலை குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர், அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். இந்நிலையில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்து வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்காக்கும் கருவிகள் மூலம் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios