ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவரான சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் கைது செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தனது மகனின் திருமணம் குறித்த தேதியை முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் கைது
முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓவாக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் தான் பதவி வகித்த 2012ஆம் ஆண்டு காலகட்டத்தில் வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடாக சுமார் ரூ.3,250 கோடி கடன் வழங்கியுள்ளார்.அந்த கடன் தொகை அவரது கணவர் தீபக் கோச்சார் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அதன்பின்னர் அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 2018 அக்டோபர் மாதம் ஐசிஐசிஐ வங்கி தலைமை பொறுப்பில் இருந்து சந்தா கோச்சார் நீக்கப்பட்டார்.இது குறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிபிஐ போலீசார் கோச்சர் வீட்டில் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றினர்.

நின்று போன திருமணம்
இந்தநிலையில் கடந்த வாரம் சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியிருந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கள் மகன் அர்ஜூன் கோச்சார் திருமணத்தை நடத்துவதற்காக முடிவு செய்து தேதியை நிர்ணயம் செய்து தாஜ் ஹோட்டலுக்கும் அட்வான்ஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஜனவரி 15 ஆம் தேதி முதல் 18வரை திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்துள்ளனர். மேலும் 150 விருந்தினர்களை அழைத்து வரும் வகையில் கார்களும் புக்கிங் செய்யப்பட்டிருந்துள்ளது. இந்தநிலையில் இந்த திருமண நிகழ்வானது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
கண்ணீர்மல்க தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி - கண்கலங்க வைக்கும் வீடியோ இதோ
