முன்னாள் காதலியை, நண்பனுடன் சேர்ந்த கூட்டு பலாத்காரம் செய்தவர்களை பொது மக்கள் செருப்பால் அடித்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. 

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர். கடந்த சனிக்கிழமை அன்று இவரது முன்னாள் காதலன் மற்றும் அவரது நண்பன் இணைந்து  பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு 2 பேர் உடந்தையாக உள்ளனர்.

பலாத்காரம் செய்த அவர்கள், அந்த பெண்ணை மிரட்டி உள்ளனர். இதுபற்றி வெளியே சொன்னால் உன்னையும் உனது  குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர்.

ஆனாலும், பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண், போலீசில் புகார கொடுத்தார். அவரது புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த நான்கு பேரும், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் போலீசாரால் நடத்தி செல்லப்பட்டனர். சாலையில் நடத்திச் செல்லப்பட்ட அவர்களை பெண்களும், ஆண்களும் செருப்பால் அடித்தனர்.  இதன் பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நான்கு பேரை, பொதுமக்கள் செருப்பால் தாக்கிய விடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

பொதுமக்கள் முன்னிலையில் அந்த நான்குபேரும் மன்னிப்பு கேட்பதும், அவர்களை பெண்கள் செருப்பாலம், தடியாலும் அடிக்கும் விடியோ வைரலாக பரவி வருகிறது.