Asianet News TamilAsianet News Tamil

மக்களின் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்... அரசு மரியாதையுடன் விடைபெற்றார்..!

டெல்லி லோதி சாலையில் உள்ள மைதானத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. மயானத்தில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர், இறுதி அஞ்சலியை செலுத்தினர். பின்னர், முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா ஸ்வராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Former External Affairs Minister SushmaSwaraj cremated with state honours at Lodhi Crematorium
Author
Delhi, First Published Aug 7, 2019, 4:54 PM IST

மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. Former External Affairs Minister SushmaSwaraj cremated with state honours at Lodhi Crematorium

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். இன்று காலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். Former External Affairs Minister SushmaSwaraj cremated with state honours at Lodhi Crematorium

அதைத்தொடர்ந்து, பாஜக தலைமையகத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு அங்கு சிறிது நேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வகித்த அவருக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பாஜக தலைமையகத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அவரது உடல் டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. Former External Affairs Minister SushmaSwaraj cremated with state honours at Lodhi Crematorium

டெல்லி லோதி சாலையில் உள்ள மைதானத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. மயானத்தில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர், இறுதி அஞ்சலியை செலுத்தினர். பின்னர், முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா ஸ்வராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios