Asianet News TamilAsianet News Tamil

நிலக்கரி முறைகேடு வழக்கில் சிக்கிய முன்னாள் முதலமைச்சர் - தண்டனை 16 ஆம் தேதி அறிவிப்பு...!

Former Chief Minister of Jharkhand Maghagoda in the case of Coal Scam case will be announced on 16th.
Former Chief Minister of Jharkhand Maghagoda in the case of Coal Scam case will be announced on 16th.
Author
First Published Dec 14, 2017, 3:40 PM IST


நிலக்கரி முறைகேடு வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கான தண்டனை 16-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று முதலமைச்சர் ஆனவர் மதுகோடா. அவர் கடந்த 2006 செப்டம்பர் முதல் 2008 ஆகஸ்ட் வரை ஜார்க்கண்ட் முதலமைச்சராக பணியாற்றினார்.

அவரது ஆட்சிக்காலத்தில் அவர் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி அம்மாநில நிலக்கரி சுரங்கங்களை மேற்குவங்கத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு மலிவு விலையில் ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது.

இந்த முறைகேடு விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.,ஐ. , மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச். சி.குப்தா, ஜார்க்கண்ட் முன்னாள் தலைமைச்செயலர் ஏ.கே. பாசு உள்ளிட்ட 15 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சாட்சியங்களிடம் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச். சி.குப்தா உட்பட 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்புஅளித்துள்ளது.

இந்த வழக்கில் 4 பேரை குற்றமற்றவர்கள் என அறிவித்து அவர்களை விடுவிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். என்ன தண்டனை என்பது குறித்து வரும் 16 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 

தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என மதுகோடா தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios