Asianet News TamilAsianet News Tamil

பஞ்சாபில் காங்கிரஸை கரைக்க மாஜி முதல்வர் அம்ரீந்தர் சிங் திட்டம்.. புதுக்கட்சி தொடங்கி பாஜகவோடு கூட்டணி..!

பஞ்சாபில் புதிய கட்சியைத் தொடங்க ஆயத்தமாகிவரும் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Former Chief Minister Amrinder Singh plans to dissolve Congress in Punjab .. Starting a new party and forming an alliance with BJP ..!
Author
Punjab, First Published Oct 20, 2021, 8:18 AM IST

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முதல்வராக மூத்த தலைவர் அம்ரீந்தர் சிங் இருந்தார். ஆனால், அமரீந்தர் சிங்குக்கும் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு இடையே பல மாதங்களாக மோதல் போக்கு இருந்தது. இதற்கிடையே பஞ்சாப் மாநில தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் தலைமை நியமித்தது. ஏற்கனவே இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த நிலையில், சித்துவை தலைவராக நிமியத்ததால் அம்ரீந்தர் சிங் கடும் அதிருப்தி அடைந்தார். Former Chief Minister Amrinder Singh plans to dissolve Congress in Punjab .. Starting a new party and forming an alliance with BJP ..!
காங்கிரஸ் மேலிடம் சித்துவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், முதல்வர் பதவியிலிருந்து அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் பதவியேற்றார். இதனையடுத்து அம்ரீந்தர் சிங் டெல்லி சென்று மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அவர் பாஜகவில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜகவில் சேரமாட்டேன் என்று அம்ரீந்தர் சிங் அறிவித்தார்.Former Chief Minister Amrinder Singh plans to dissolve Congress in Punjab .. Starting a new party and forming an alliance with BJP ..!
இந்நிலையில் அம்ரீந்தர்சிங் விரைவில் தனிக்கட்சியைத் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவும் அம்ரீந்தசிங் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுக்கட்சிக்கான அறிவிப்பை விரைவில் அம்ரீந்தர் சிங் வெளியிடுவார் என்று அவருடைய ஆதரவாளர்கள்  தெரிவித்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios