டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார் விபத்து... சம்பவ இடத்திலேயே சைரஸ் மிஸ்திரி உயிரிழப்பு!!
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குஜராத்திலிருந்து மும்பை திரும்பிக் கொண்டிருந்த போது சைரஸ் மிஸ்திரி பயணித்த கார் விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே சைரஸ் மிஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார். 2012 இல் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் பொலான்ஜி மிஸ்திரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலகின் மிகப்பெரிய மகாசேச விருது தேவையில்லை.. சைலஜா டீச்சர் அதிரடி முடிவு.! ஏன் தெரியுமா ?
அவருடன் பயணித்த கார் டிரைவர் உட்பட மற்ற இருவர் படுகாயம் அடைந்தனர். மிஸ்திரியின் உடல் குஜராத்தில் உள்ள காசா கிராமப்புற மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக மாற்றப்பட்டுள்ளது. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2012 இல் ரத்தன் டாடா பதவி விலகிய பிறகு, டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்த சைரஸ் பல்லோன்ஜி மிஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படிங்க: மாதம் 2.50 லட்சம் சம்பளத்தில் இந்திய கடலோர காவல்படையில் வேலை.. 12 ஆம் வகுப்பு படித்திருத்தால் போதும்..
டாடா சன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அவர் தலைவராக நியமிக்கப்பட்டார். ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் தலைவரும் கட்டுமானத் தொழிலதிபருமான அவரது தந்தை பல்லோன்ஜி மிஸ்திரி ஓய்வு பெற்ற பிறகு 2006 இல் டாடா சன்ஸ் வாரியத்தில் சேர்ந்தார். அக்டோபர் 24, 2016 அன்று, டாடா சன்ஸ் வாரியம் (குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனம்) மிஸ்திரியை தலைவர் பதவியில் இருந்து நீக்க வாக்களித்தது.