பலமுறை தகவல் தந்தும் பயங்கரவாத முகாம்களை அழிக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதான் தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானில் திட்டமிடப்படுகின்றன. இந்தியாவில் நடைபெரும் தீவிரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தானில் இருந்து உதவிகள் செய்யப்படுகின்றன. தீவிரவாத சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களை இந்தியா, பாகிஸ்தானுக்கு கொடுக்கிறது. இந்தியா வழங்கும் ஆதாரங்களை பாகிஸ்தான் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பால கோட் பகுதியில் விமானப்படை தாக்குதல் நடத்தியது. அங்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. தாக்குதலில் தீவிரவாத இயக்க தளபதிகள், தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். வனப்பகுதிக்கு மையத்தில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை குறி வைத்தே இந்தியா தாக்குதல் நடத்தியது.

தீவிரவாத தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்தும் பாகிஸ்தான் அதனைக் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகள் மீண்டும் இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தகவல்கள் வந்தன. இதனை அடுத்தே பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது.

 

பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் பற்றி தகவல் தந்தோம்; பலமுறை தகவல் தந்தும் பயங்கரவாத முகாம்களை அழிக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பலமுறை தகவல் தந்தும் பயங்கரவாத முகாம்களை அழிக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விமானப்படையின் தாக்குதலில் பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார். ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்’’ என அவர் தெரிவித்தார்.