Asianet News TamilAsianet News Tamil

விஷமாக மாறிய ஷவர்மா! 7 வயது சிறுவன் உள்பட மூவர் மருத்துவமனையில் அனுமதி

கேரளாவில் உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Food poisoning: 3 hospitalised after eating shawarma in Idukki; restaurant shut down
Author
First Published Jan 8, 2023, 11:51 AM IST

கேரளாவில் உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கியில் நெடுங்கண்டம் பகுதியில் உள்ள கேமல் ரெஸ்டாரெண்ட் என்ற உணவகத்தில் மூன்று பேர் ஷவர்மா வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். பின்னர் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவனி சதுர்வேதி: வெளிநாட்டு விமானப்படை போர்ப் பயிற்சியில் முதல் இந்திய வீராங்கனை

பாதிக்கப்பட்டவர்கள் லிசி மத்தாய் (56), அவரது மகள் பிபின் மேத்யூ (39)  மற்றும் மகன் மேத்யூ பிபின் (7) ஆகியோர் என்று தெரியவந்தது. ஜனவரி 1ஆம் தேதி பிற்பகல் ஆன்லைன் மூலம் அந்த உணவகத்தில் ஷவர்மா ஆர்டர் செய்து வரவழைத்துள்ளனர் என்றும் ஷவர்மாவைச் மூவரும் சாப்பிட்டுள்ளனர்.

இரவில் அவர்களுக்கு வாந்தி, பேதி, காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளன. மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவர்கள் விஷத்தன்மை கொண்ட உணவை உண்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட உணவகத்தை ஆய்வு செய்தனர். அப்போது அந்த உணவகம் அசுத்தமாக இருப்பதைக் கண்ட அதிகாரிகள் உடனடியாக உணவகத்தை மூட உத்தரவிட்டுள்ளனர்.

ஷவர்மா என்பது இறைச்சியை மெல்லிய துண்டுகளாக நறுக்கி சேர்த்துத் தயாரிக்கப்படும் உணவு. இது மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமான உணவு.

ஆன்லைனில் பிரியாணி வாங்கிச் சாப்பிட்ட இளம்பெண் பரிதாப பலி

Follow Us:
Download App:
  • android
  • ios