அரசியல் வாதிகளில் ஹைடெக் பிரதமரான நரேந்திர மோடிக்கு கோடிக்கணக்கான டுவிட்டர் ஃபாலோவர்ஸ் உள்ளனர். இதனால் அவர் எப்போதும் அதிகம் கவனிக்கப்பட கூடியவராக இருந்தார். இந்நிலையில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் கடுப்பான 35 லட்சம் பேர் மோடியின் அக்கவுண்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்திய அரசியல் வாதிகளில் ஹைடெக் பிரதமர் மோடி. அவர் தேர்தலில் நின்றதை கூட தனியாக ஒரு ஹைடெக் குழ்வின் பிரச்சாரம் மூலம் வெற்றி பெற்றது ஊரே அறிந்த விஷயம். நவீன விஷயங்களை மோடி திறமையாக பயன் படுத்தினார். 

டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என இளைய தலைமுறையும் , நடுத்தர வர்க்கத்தினரும் அதிகம் பயன் படுத்தும் செயலிகள் மூலம் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தார். சினிமா கதாநாயகர்களுக்கு இணையாக கோடிக்கணக்கான மக்களை டுவிட்டரில் ஃபாலோவர்ஸ் ஆக மோடி அடைந்தார்.

தினமும் 20,000 பேருக்கு மேல் இந்தியா அல்ல அல்ல உலகம் முழுதும் இருந்து இணைந்தனர். ஆனால் இன்று ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் குறிப்பாக நடுத்தர மற்றும் இளைய தலைமுறையினரின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் மோடி.

இதன் விளைவு கடந்த 2 நாட்களில் 35 லட்சம் பேர் அட போயா நீயும் உன் டுவிட்டரும் என மோடியின் அக்கவுண்டிலிருந்து அன் ஃபாலோ(un follow) செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என தெரிகிறது.