Asianet News TamilAsianet News Tamil

80 கோடி பேருக்கு இலவச அரிசி, கோதுமை, பருப்பு... மத்திய அரசின் அதிரடி சரவெடி அறிவிப்புகளின் முழு விவரம்..!

டெல்லியில் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்கொரோன வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலான நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 
 

FM Nirmala Sitharaman announces food subsidy for 80 crore poor
Author
Delhi, First Published Mar 26, 2020, 2:45 PM IST

கொரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் கடவுளாக பார்க்கப்படுகின்றனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்கொரோன வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலான நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

அறிவிப்புகளின் முழு விவரம்;-  

*  நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும்.

* ஏழைகள், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியாவில் எவரும் பசியில் இருக்க கூடாது என்பதற்காக மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும்.

*  விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்

*  விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும்.

* கொரோனாவிற்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு ரூ.50 லட்சம் அளவிற்கு காப்பீடு செய்யப்படும்.

* ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்ள 5 கோடி பேரின் ஊதியம் ரூ.182லிருந்து 200 ரூபாயாக அதிகரிக்கப்படும். அவர்களுக்கு கூடுதலாக 2000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

* வங்கிகளில் ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா 500 வழங்கப்படும்.

* வீடுகள் தோறும் கூடுதலாக 3 மாதங்களுக்கு ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும். 

* 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசியுடன், அடுத்த 3 மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ கோதுமை வழங்கப்படும்.
 
*  100 நாள் வேலை திட்டத்தின் கூடுதலாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 

* முறைசாரா தொழிலாளர்களுக்காக ரூ.2 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படும் 

* விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்

* விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும்

* முறைசாரா தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்

* உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் .

* 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை 3 மாத்துக்கு கூடுதலாக வழங்கப்படும் 

* ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும்

* மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள 7 கோடி பெண்களுக்கு, அடமானம் எதுவும் இல்லாமல் வழங்கப்படும் கடன் 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.

* கொரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் கடவுளாக பார்க்கப்படுகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios