flights denied to carry shivsena mp ravindra gaikwad
ஏர் இந்தியா ஊழியரை செருப்பால் அடித்த விவகாரத்தில், தனியார் விமான நிறுவனக் கூட்டமைப்புசிவசேனா எம்.பி. ரவிந்திர கெய்க்வாட்டை ஏற்றிச் செல்ல தடை விதித்துள்ளன. இதையடுத்து, டெல்லியை விட்டு செல்ல முடியாமல் கெய்க்வாட் தவித்து வருகிறார்.
இந்திய விமானங்கள் கூட்டமைப்பு சார்பில் (“நோ-பிளைலிஸ்ட்”) விமானப் பயணம் செய்ய தகுதி அற்றவர்கள் என்ற பட்டியலை உருவாக்க உள்ளது. சர்வதேச அளவில் இது போல் பட்டியலை பல நாடுகளும் வைத்துள்ள நிலையில், அதுபோன்று உருவாக்கி, முதல் நபராக சிவசேனா எம்.பி.ரவிந்திர கெய்க்வாட் பெயர் சேர்க்கப்பட உள்ளது.

செருப்படி
சிவசேனா கட்சியின் எம்.பி. ரவிந்திர கெய்க்வாட்(வயது57). ஏர் இந்தியா விமானத்தில் ‘பிஸ்னஸ்கிளாஸ்’ டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார், ஆனால், நேற்று புனேயில் இருந்து டெல்லி சென்ற அந்த ஏர் இந்தியா விமானத்தில் ‘பிசினஸ்கிளாஸ்’ இல்லாததால், ‘எக்னாமி கிளாசில்’ எம்.பி. கெய்க்வாட்டுக்கு டிக்கெட் ஒதுக்கப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த எம்.பி. கெய்க்வாட், விமான மேலாளர் சிவக்குமாரை செருப்பால் அடித்தார். இந்த சம்பவம் பயணிகள் மத்தியிலும், ஏர் இந்தியா நிர்வாகம் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் இரு வழக்குப்பதிவு செய்துள்ளனர், தாக்கப்பட்ட நபரின் மருத்துவ அறிக்கை கிடைத்தபின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தடை பட்டியல்
இந்நிலையில், விமானத்தில் பிரச்சினை செய்பவர்கள், மரியாதைக் குறைவாக நடந்து கொள்பவர்கள், பயணிகளின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிப்பவர்களைக் கண்டறிந்து அவர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டு விமானத்திலும் பயனம் செய்ய தடைவிதிக்கும் திட்டத்தை ஏர்-இந்தியா நிறுவனம், உள்ளிட்ட இந்திய விமானங்கள் கூட்டமைப்பு கொண்டு வர உள்ளன.

டிக்கெட் ரத்து
இதற்கிடையே டெல்லியில் தங்கி இருக்கும் எம்.பி. கெய்க்வாட் புனே செல்ல ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார். அந்த டிக்கெட்டை நேற்று மாலை விமானநிறுவனம் ரத்து செய்தது.
மறுப்பு
இதையடுத்து, எம்.பி. கெய்க்வாட்டின் உதவியாளர் இன்டிகோ விமானநிறுவனத்தை தொடர்பு கொண்டு நேற்று மாலை 5.50 மணிக்கு கெய்க்வாட்டுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தார். ஆனால், அனைத்து உள்நாட்டு விமான நிறுவனங்களும் கெய்க்வாட்டை ஏற்றிச்செல்ல கூடாது என முடிவு செய்து இருப்பதையடுத்து, அவரின் பெயரை முன்பதிவு செய்ததும், அதில் எச்சரிக்கை மணி ஒலித்தது. இதைத்தொடர்ந்து இன்டிகோ நிறுவனமும் எம்.பி. கெய்க்வாட்டுக்கு டிக்கெட் மறுத்தது.
தவிப்பு
இதோபோல், ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட், கோ ஏர், விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா நிறுவனங்களும் எம்.பி. கெய்க்வாட்டுக்கு டிக்கெட் தர மறுத்தன. இதனால், எம்.பி, ரவிந்திரகெய்க்வாட் டெல்லியை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்.

பாதுகாப்பு
இது குறித்து இந்திய விமான நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் உஜ்வால் தே கூறுகையில் “ ஏர் இந்தியா மற்றும் இந்திய விமானங்கள் கூட்டமைப்பு, எம்.பி. ரவிந்திர கெய்க்வாட்டை விமானத்தில் ஏற்றிச்செல்லக்கூடாது என முடிவு எடுத்துள்ளோம். இந்த நடவடிக்கை எங்கள் ஊழியரையும் பாதுகாக்கவும், பயணிகளின் நலனுக்காகவும் எடுக்கப்பட்டது'' என்றார்.
பாக்ஸ் மேட்டர்....
சட்டப்படி ஆய்வு செய்வோம்...
மத்திய உள்நாட்டு விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறுகையில், “ எம்.பி. ரவிந்திர கெய்க்வாட்டை ஏற்றிச் செல்ல விருப்பமில்லை என்று அனைத்து விமானநிறுவனங்களும் என்னிடம் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை தன்னிச்சையாக எடுக்கப்பட்டது, இது குறித்து சட்டப்படி ஆலோசிப்போம். எந்த நடவடிக்ைகயும் சட்டப்படி இருக்க வேண்டும். விமானச்சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். சட்டத்துக்கு உட்பட்டு இந்தநடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளதா என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம்’’ என்றார்.
