Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1200 கோடி பெற்ற ஐந்து பிராந்திய கட்சிகள்: திமுக பெற்றது எவ்வளவு?

தேர்தல் பத்திரங்கள் மூலம் ஐந்து மாநிலங்களை சேர்ந்த பிராந்திய கட்சிகள் 2022-23ஆம் ஆண்டில் ரூ.1200 கோடிக்கும் மேல் பெற்றுள்ளன

Five regional parties together got over Rs 1200 crore in electoral bonds how much dmk got smp
Author
First Published Dec 16, 2023, 1:09 PM IST

பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்), திரிணாமுல் காங்கிரஸ், திமுக, பிஜு ஜனதா தளம் (பிஜேடி) மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய ஐந்து பிராந்தியக் கட்சிகள் இணைந்து 2022-23ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,243 கோடியைப் பெற்றுள்ளன என்று அவர்களின் சமீபத்திய வருடாந்திர தணிக்கை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதுவே, 2021-22இல் அக்கட்சிகள் பெற்ற மொத்த தொகையான ரூ.1,338 கோடியை ஒப்பிடும் போது தற்போது குறைவாகவே பெற்றுள்ளன. அதே சமயம், இந்த காலகட்டத்தில் பிஆர்எஸ் கட்சி மட்டும் தனியாக 3.4 மடங்கு அதிக பங்களிப்புகளை பத்திரங்களிலிருந்து பெற்றுள்ளது.

மொத்த வரவுகளில் 2022-23இல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு 97 சதவீதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளது. திமுகவுக்கு 86 சதவீதம், பிஜேடிக்கு 84 சதவீதம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 70 சதவீதம், பிஆர்எஸ் கட்சிக்கு 71 சதவீதமும் தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளது.

தற்போது தேசிய கட்சியாக உள்ள ஆம் ஆத்மி, 2022-23இல் தேர்தல்  பத்திரங்கள் மூலம் ரூ.36.4 கோடியை பெற்றுள்ளது. கடந்த 2021-22இல் அக்கட்சி ரூ.25.1 கோடியை பெற்றிருந்ததை ஒப்பிடும் போது இது அதிகமாகும். அதன் மொத்த வருமானம் 2021-22ல் ரூ.44.5 கோடியிலிருந்து 2022-23ல் ரூ.85.2 கோடியாகவும், அதன் ஆண்டுச் செலவு ரூ.30.3 கோடியிலிருந்து ரூ.102 கோடியாகவும் உயர்ந்துள்ளது. சுவாரஸ்யமாக, ஆம் ஆத்மியின் பொதுப் பிரச்சாரச் செலவுகள் 2022-23ல் 330% அதிகரித்து ரூ.58.8 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இது ரூ.13.7 கோடியாக இருந்தது. தற்போது டெல்லி மற்றும் பஞ்சாபில் பதவியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு 2022-23இல் பொதுப் பிரச்சாரம் மற்றும் கருத்துக்கணிப்புகளுக்கு ரூ.23.6 கோடி செலவாகும்.

ஐந்து பிராந்திய கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ள 2022-23 ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையின்படி, அதிகபட்சமாக பிஆர்எஸ் கட்சி தனது மொத்த வருமானம் ரூ737.7 கோடி என தெரிவித்துள்ளது. 2021-22இல் இது ரூ.218 கோடியாக இருந்தது. அதனைத்தொடர்ந்து, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது மொத்த வருமானம் ரூ.333.4 கோடி என தெரிவித்துள்ளது. 2021-22இல் அக்கட்சியின் மொத்த வருவாயான ரூ.545.7 கோடியை ஒப்பிடும் போது இது குறைவு.

அதேபோல், திமுக தனது மொத்த வருமானம் ரூ.214.3 கோடி என குறிப்பிட்டுள்ளது. 2022-22இல் அக்கட்சி பெற்ற  ரூ. 18.7 கோடியை ஒப்பிடும் போது இது குறைவு. பிஜேடி ரூ.181 கோடி (2022-22இல் ரூ.307 கோடி), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.74.8 கோடியை (2022-22இல் ரூ.93.7 கோடி) பெற்றுள்ளது.

வாரத்தில் 5 நாட்கள் வேலை மாற்றம்: வங்கிகள் இன்று செயல்படுமா? விடுமுறைகளில் மாற்றமா?

செலவு செய்த தொகையை பொறுத்தவரை திரிணாமூல் காங்கிரஸ் அதிகமாக செலவு செய்துள்ளது. அக்கட்சி ரூ 181 கோடியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ 79.3 கோடியும், பிஆர்எஸ் ரூ 57.5 கோடியும், திமுக ரூ 52.6 கோடியும் பிஜேடி ரூ 9.9 கோடியும் செலவழித்துள்ளது.

எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படும், வெளிப்படைத்தன்மை இல்லாததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளும் பிஆர்எஸ் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக தொகை கிடைத்துள்ளது. தெலங்கானாவில் சமீபத்தில் ஆட்சியை இழந்த அக்கட்சி 2022-23ல் ரூ. 529 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.153 கோடியை  ஒப்பிடும் போது இது மிகப்பெரிய முன்னேற்றமாகும்.

2022-23ல் தேர்தல் பத்திரங்கள் மூலம் திரிணாமூல் ரூ.325 கோடியும், திமுக ரூ.185 கோடியும், பிஜேடி ரூ.152 கோடியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.52 கோடியும் ஈட்டியுள்ளன. இது 2021-22 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது குறைவாகும். அந்த ஆண்டில் திரிணாமூல் ரூ. 528, திமுகவின் ரூ. 306 கோடி, பிஜேடி ரூ. 291 கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ. 60 கோடியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஈட்டின.

தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022-23 ஆண்டு தணிக்கை அறிக்கையின்படி, தனது மொத்த வருமானம் ரூ.141.7 கோடி என தேசிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. கடந்த 2021-22இல் அக்கட்சியின் ரூ.106 கோடி வருமானத்தை ஒப்பிடும் போது இது குறைவாகும். அதேசமயம், 2022-23இல் அக்கட்சி ரூ.ரூ.106 கோடி செலவு செய்துள்ளது. 2021-22இல் ரூ.83.4 கோடி செலவு செய்யப்பட்தை ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios