வாபஸ் பெறப்பட்டது விழிஞ்சம் போராட்டம்… முதல்வருடனான பேச்சுவார்த்தைக்கு பின் முடிவு!!
விழிஞ்சம் துறைமுகத்துக்கு எதிராக கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் மீனவர்கள் 130 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
விழிஞ்சம் துறைமுகத்துக்கு எதிராக கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் மீனவர்கள் 130 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் போராட்டக்குழு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் விழிஞ்சம் துறைமுகத்துக்கு எதிராக கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் மீனவர்கள் 130 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை திரும்பபெற முடிவு எடுக்கப்பட்டது. இதுக்குறித்து பேசிய லத்தீன் திருச்சபை, புயலில் வீடுகள் இடிந்தவர்களுக்கு அரசே ரூ.5,500 வாடகை வாடகையை முழுமையாக செலுத்தும் என போராட்டக்குழு தெரிவித்துள்ளது. அதானி நிதியில் இருந்து ரூ.2500 தருவதாக கூறியதை அரசு நிராகரித்துவிட்டதாகவும் போராட்டக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 20 முறை கல்லால் தாக்கப்பட்ட இளைஞர்.! 3 பெண்கள், 3 ஆண்கள் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச்! வெளியான சிசிடிவி வீடியோ
அவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நாட்களுக்கு அரசு இழப்பீடு வழங்குவது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கடலோர அரிப்பு குறித்து போராட்டக் குழுவுடன் நிபுணர் குழு விவாதிக்கும். போராட்டக் குழு கடலோர அரிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவையும் அமைக்கும். தலைமைச் செயலாளர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்படும். அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா என்பதை கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்த அறிவிப்பை போராட்டத்தின் முன்னணியில் இருந்த விகார் ஜெனரல் யூஜின் பெரேரா வெளியிட்டார். அதில், அதில், போராட்டம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியுள்ளதால் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: RBI-யிடம் ஆலோசித்த பிறகே பணமதிப்பிழப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது... உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!
பினராயி விஜயன் அரசு எடுத்த நடவடிக்கைகள் அல்லது உறுதிமொழிகளில் திருப்தி அடைந்ததால் அல்ல. தேவைப்பட்டால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக பல கோடி ரூபாய் மதிப்பிலான விழிஞ்சம் துறைமுகத் திட்டம் தொடர்பாக கடலோர பாதிப்பு ஆய்வு நடத்துவது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் அடங்கிய சாசனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கட்டுமான பணியை நிறுத்த கோரியும் கடந்த சில மாதங்களாக போராட்டக்காரர்கள் முள்ளூரில் உள்ள பல்நோக்கு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். மேலும் புதிதாக அமையவிருக்கும் துறைமுகத்தின் ஒரு பகுதியாக செயற்கை கடல் சுவர்கள் அமைப்பதன் காரணமாக அப்பகுதியில் கடலோர அரிப்பு அதிகரித்துள்ளதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டினர்.