Asianet News TamilAsianet News Tamil

புதிய தோற்றத்தில் ஏர் இந்தியா விமானம்! லோகா, டிசைன் எல்லாமே புதுசு!

புதிய தோற்றத்தில் விமானங்களைப் புதுப்பிக்க ஏர் இந்தியா நிறுவனம் 400 மில்லியன் டாலர் தொகையை செலவிடுகிறது.

First Look Of Air India Planes After Major Logo, Design Change sgb
Author
First Published Oct 7, 2023, 12:23 PM IST

டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் அதன் புதிய A350 விமானங்களின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளது. ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய தோற்றத்தில் 'தி விஸ்டா' என்ற பெயரில் புதிய லோகோவை அறிமுகப்படுத்தியது.

சமீபத்திய A350 விமானத்தின் படங்கள் பிரான்சின் துலூஸில் உள்ள ஒரு தொழிற்சாலையில் எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக வண்ணம் பூசப்பட்ட விமானங்கள் இந்த குளிர்காலத்தில் இந்தியாவுக்கு வரும் என்று ஏர் இந்தியா  நிறுவனம் தெரிவித்துள்ளது.

"துலூஸில் உள்ள வண்ணம் பூசும் மையத்தில் எங்கள் புதிய கம்பீரமான A350 விமானத்தின் முதல் தோற்றம் இதோ. இந்த குளிர்காலத்தில் எங்கள் A350 விமானங்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கும்" என ட்விட்டரில் ஏர் இந்தியா பதிவிட்டுள்ளது.

விவசாயத்தில் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்த எம்.எஸ்.சுவாமிநாதன்: பிரதமர் மோடி கட்டுரை

புதிய தோற்றத்தில் விமானங்களைப் புதுப்பிக்க ஏர் இந்தியா நிறுவனம் 400 மில்லியன் டாலர் தொகையை செலவிடுகிறது.

தி விஸ்டா என்ற புதிய லோகோவின் டிசைன் மற்றும் வண்ணங்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் கூறுகிறது. இதன் மூலம் ஏர் இந்தியா நிறுவனம் முழுமையான மாற்றத்துக்குத் தயாராகி வருகிறது என்று அந்நிறுவன உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

"எங்கள் புதிய பிராண்ட் உலகெங்கிலும் உள்ள விருந்தினர்களுக்கு சேவை செய்யும் லட்சியத்தை பிரதிபலிக்கிறது. ஏர் இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனமாகக் காட்டுகிறது. மேலும் இது உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு புதிய பெருமிதமாக இருக்கிறது" என ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் கூறியிருக்கிறார்.

2025ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் புதிய லோகோ மற்றும் டிசைனுக்கு மாற்றப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாம்பாக்கத்தில் விரைவில் புதிய ரயில் நிலையம்! டெண்டர் கோரும் தெற்கு ரெயில்வே!

Follow Us:
Download App:
  • android
  • ios