Asianet News TamilAsianet News Tamil

Omicron : ஷாக்கிங் நியூஸ்.! இந்தியாவில் பரவிய புது வகை ஒமிக்ரான் தொற்று..நாடு முழுவதும் எச்சரிக்கை !

Corona : இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் கொரோனா வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

First cases of new Omicron sub-variants detected in Maharashtra 7 positive Indian govt alert all states
Author
First Published May 29, 2022, 8:38 AM IST

ஒமிக்ரான் தொற்று

ஒமிக்ரானின் உருமாறிய XE வேரியன்ட் தொற்று முதன்முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்டு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தேசிய சோதனை ஆய்வக அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் கொரோனாவே இந்த 3ஆவது அலையை ஏற்படுத்தி இருந்தது.

2ஆம் அலை அளவுக்கு இந்த ஒமிக்ரான் கொரோனா 3ஆம் அலை இல்லை என்றாலும் பாதிப்பு அதிகமாகவே இருந்தது. அதன் பின்னரே கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து வந்தது. சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், மக்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். 

First cases of new Omicron sub-variants detected in Maharashtra 7 positive Indian govt alert all states

மகாராஷ்டிரா

இந்தச் சூழலில் ஒமிக்ரான் வைரசின் புதிய மாறுபாடுகள் பரவ தொடங்கி உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்முறையாக 4 பேருக்கு புதிய வகை BA4 வகை ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி BA5 வகை ஒமிக்ரானும் 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்கா உட்பட உலகின் சில பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒமிக்ரானின் இந்த துணைப் பிரிவுகள் கண்டறியப்பட்டன. இவை இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் கொரோனா வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் BA4 வகை தொற்றால் 4 பேரும், BA5 வகை தொற்றால் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய வகை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 7 பேரில் 2 பேர் தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம் சென்று திரும்பியவர்கள் ஆவர். 3 பேர் கேரளா மற்றும் கர்நாடகாவுக்குப் பயணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க : ராமதாஸ், அன்புமணி செஞ்ச துரோகம்..வன்னிய சமூகம் சும்மா விடாது - காடுவெட்டி குரு மகள் ஆவேசம் !

இதையும் படிங்க : Raid : பிரபல ஆனந்தாஸ் குழும உணவகங்களில் ‘திடீர்’ ஐடி ரெய்டு.. எதற்கு தெரியுமா ?

Follow Us:
Download App:
  • android
  • ios