பாஜக அலுவலகத்தில் தீ..! தப்பியோடிய  மர்மநபர்களை தீவிரமாக தேடும் போலீசார்..! 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளது என்ற இடம் அசான்சோல். இந்த பகுதிக்குக்கு அருகே உள்ள  சலான்பூர் கிராமத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று தீ வைத்து உள்ளனர். தீ வைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்திற்கு பின்னணியாக இருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இருக்கலாம் என பாஜக குற்றம் சாட்டியது. அதனைத்தொடர்ந்து இதனை ஏற்க மறுத்துள்ளனர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்கம் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஜக அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது