fire accident at a bar in bangalore
பெங்களூரு மதுபான விடுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி பணியாளர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கைலசிபால்யா பகுதியில் கும்பாரா சங் என்ற கட்டிடம் உள்ளது. காய்கறி சந்தை அருகே உள்ள இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் உணவு விடுதியுடன் இணைந்த மதுபான விடுதி செயல்பட்டு வந்தது.
இந்த விடுதியில் பணியாற்றிய ஊழியர்கள், அந்த கட்டிடத்திலேயே தங்கி வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் உணவு விடுதியில் இருந்து புகை வெளிப்பட்டது. இதை கவனித்த சிலர் உடனடியாக தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால்,அதற்குள் இந்த உணவு விடுதிக்குள் தூங்கி கொண்டு இருந்த பணியாளர்கள் 5 பேர் தீயில் சிக்கி பலியாயினர்.
தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
