Asianet News TamilAsianet News Tamil

இஸ்டாவில் சர்ச்சை கருத்து… நடிகை கங்கனா மீது வழக்குப்பதிவு… மும்பை போலீஸார் அதிரடி!!

சமூக ஊடகங்களில் தங்களுக்கு எதிராக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில், நடிகர் கங்கனா ரனாவத் மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

FIR registered against actor Kangana Ranaut in Mumbai
Author
Mumbai, First Published Nov 23, 2021, 8:02 PM IST

சமூக ஊடகங்களில் தங்களுக்கு எதிராக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில், நடிகர் கங்கனா ரனாவத் மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாக தனது டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் பகிர்ந்து வருகிறார். இதை அடுத்து அவரது டிவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறுவதாக கடந்த நவம்பர் 19 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத், வேளாண் சட்டம் வாபஸிற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

FIR registered against actor Kangana Ranaut in Mumbai

மேலும் இதுக்குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காலிஸ்தானி பயங்கரவாதிகள் அரசை தங்களுக்கு ஏற்றப்படி வளைக்கலாம். ஆனால் நாட்டின் ஒரே ஒரு பெண் பிரதமர் (இந்திரா) அவர்களைத் தனது ஷூவில் போட்டு நசுக்கினார். அவர் (இந்திரா) இந்த தேசத்திற்கு எவ்வளவு துன்பம் கொடுத்திருந்தாலும் கொசுக்களைப் போல் தன் உயிரைப் பணயம் வைத்து அவர்களை (காலிஸ்தானி பயங்கரவாதிகளை) நசுக்கினார். அவர் உயிரிழந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட இன்றும் அவரது (இந்திரா) பெயரைக் கேட்டால் அவர்கள் நடுங்குகிறார்கள். அவரை போன்ற ஒரு நபர் தான் இப்போது தேவை" எனப் பதிவிட்டிருந்தார். இந்தச் சர்ச்சைக் கருத்துக்கு எதிராக கங்கனா ரனாவத் மீது டெல்லி மந்திர் மார்க் காவல் நிலையத்தின் சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நடிகை கங்கனா ரனாவத்தின் இந்தச் சர்ச்சை பதிவுக்கு குருத்வாரா அமைப்பும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கங்கனா ரனாவத் சீக்கியர்களை இழிவான மற்றும் அவமதிக்கும் வார்த்தைகளால் விமர்சித்துள்ளதாகவும் சாடியுள்ளனர்.

FIR registered against actor Kangana Ranaut in Mumbai

இந்த நிலையில் கங்கனாவின் இந்தப் பதிவு வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி டெல்லியில் இயங்கி வரும் சீக்கிய அமைப்பான குருத்வாரா மேலாண்மை கமிட்டி சார்பில் அதன் தலைவரான மாஞ்சிந்தர் சிங் சிர்ஸா மும்பை காவல்துறையில் கங்கனா மீது புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் சமூக ஊடகங்களில் தங்களுக்கு எதிராக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில், நடிகர் கங்கனா ரனாவத் மீது மும்பையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 295A-ன் (வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள், ஒரு வகுப்பினரின் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் மத உணர்வுகளை சீற்றம் செய்யும் நோக்கம்) பதிவு) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios