Asianet News TamilAsianet News Tamil

அலற வைத்த ஐடி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் வைத்த ஆப்பு... பீதியில் மத்திய அரசு ஊழியர்கள்..!

ஊழல், முறைகேடு, பாலியல் தொல்லை உள்ளிட்ட புகாரின் காரணமாக வருமான வரித்துறை அதிகாரிகள் 12 பேரை மத்திய அரசு அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. 

Finance Ministry Orders 12 Senior Govt Officers to Retire
Author
Delhi, First Published Jun 11, 2019, 1:13 PM IST

ஊழல், முறைகேடு, பாலியல் தொல்லை உள்ளிட்ட புகாரின் காரணமாக வருமான வரித்துறை அதிகாரிகள் 12 பேரை மத்திய அரசு அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.

 Finance Ministry Orders 12 Senior Govt Officers to Retire

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 354 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து மே 30-ம் தேதி புதிய மத்திய அமைச்சரவை பதவியேற்றது. கடந்த முறை ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், இந்த முறை நிதியமைச்சராக பொறுப்பேற்றார். இந்திராகாந்திக்கு பிறகு பொறுப்பேற்ற முதல் பெண் நிதியமைச்சர் என்பதால் அவரது தலைமையில் நிதி அமைச்சகம் பல அதிரடி முடிவுகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. Finance Ministry Orders 12 Senior Govt Officers to Retire

இந்நிலையில் நிதியமைச்சகத்தின் விதி எண் 56-இன் கீழ் மூத்த அதிகாரிகள் சிலருக்கு நிதி அமைச்சகம் சார்பில் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்திய வருவாய்த் துறையில் ஆணையர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர், இரு பெண் அதிகாரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தன் பெயரிலும் குடும்பத்தினர் பெயரிலும் 3 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கிய வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவரும் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகிள்ளார்.

Finance Ministry Orders 12 Senior Govt Officers to Retire

மேலும் இணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி பெரிய அளவில் ஊழல் செய்திருப்பதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது போன்று பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 12 அதிகாரிகளை பணிநீக்கம் செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios