டெல்லி விமான நிலையத்தில் முதியவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்த நிலையில், அங்கு வந்த மருத்துவர் விரைந்து செயல்பட்டு முதியவரின் உயிரை காப்பாற்றினார்.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் எப்பொழுதும் போல இன்றும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டு இருந்தது. அப்போது 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பயணத்திற்காக காத்திருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

திட்டத்தை ஏற்க மறுத்த தமிழக அரசு; தமிழகத்திற்கான ரூ.2 ஆயிரம் கோடியை நிறுத்திய மத்திய அரசு

முன்னதாக முதியவர் தனது நெஞ்சில் கையை வைத்தபடி கீழே சுருண்டு விழுந்த நிலையில் சுற்றி இருந்தவர்கள் நடப்பது என்னவென்றே தெரியாமல் திகைத்து நின்றனர். அப்போது அங்கு வந்த பெண் மருத்துவர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு CPR (Cardiopulmonary resuscitation) என்று சொல்லக்கூடிய சிகிச்சை முறையில் முதியவரின் மார்பில் கை வைத்து அழுத்தத் தொடங்கினார்.

Scroll to load tweet…

பெண் மருத்துவர் அளித்த முதல் உதவியால் முதியவர் சிறிது நேரத்தில் கண் விழித்தார். இதனைத் தொடர்ந்து முதியவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடையே மாரடைப்பால் உயிருக்கு போராடிய முதியவருக்கு சரியான நேரத்தில் விரைந்து செயல்பட்டு முதலுதவி அளித்த பெண் மருத்துவரை சூழ்ந்திருந்த பலரும் வெகுவாக பாராட்டினர். மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்களும் பெண் மருத்துவரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.