Asianet News TamilAsianet News Tamil

சாதாரண காய்ச்சல்.. கொரோனா பயத்தில் இளம் தம்பதி தற்கொலை.. இறுதி சடங்கிற்கு பணம் வைத்து உருக்கம்..!

கர்நாடகா மாநிலம் மங்களூரு அடுத்த பைக்கம்படியோவை சேர்ந்தவர் ரமேஷ்(39). இவரது மனைவி சுவர்ணா(35) கடந்த ஒரு வாரத்திற்கு முன் இருவரும் தங்களை பரிசோதித்துக் கொண்டதில் இருவருக்கும் கொரோனா பாசிட்டிவ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

Fearing Covid-19... couple suicide in Mangaluru
Author
Mangalore, First Published Aug 18, 2021, 7:50 PM IST

மங்களூரு அருகே சாதாரண சளி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு கொரோனா தாக்கி விட்டதாக கருதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் மங்களூரு அடுத்த பைக்கம்படியோவை சேர்ந்தவர் ரமேஷ்(39). இவரது மனைவி சுவர்ணா(35) கடந்த ஒரு வாரத்திற்கு முன் இருவரும் தங்களை பரிசோதித்துக் கொண்டதில் இருவருக்கும் கொரோனா பாசிட்டிவ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த இளம் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முன் மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சசிகுமாருக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். 

Fearing Covid-19... couple suicide in Mangaluru

 உடனே அவர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் 2 பேரும் தாங்கள் வசித்த அடுக்கு மாடி குடியிருப்பிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீஸ் கமி‌ஷனர் மற்றும் போலீசார் 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் கொரோனா இல்லை என்று சான்றிதழ் வந்தது. இதனால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுரத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Fearing Covid-19... couple suicide in Mangaluru

இதற்கிடையே தற்கொலை செய்வதற்கு முன்பு ஆர்ய சுவர்ணா, போலீஸ் கமி‌ஷனர் சசிகுமாரிடம் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் தனக்கு தொடர்ந்து இருமல் இருப்பதால், தன்னால் பேசவும், சாப்பிடவும் முடியவில்லை, இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதால் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும், இறுதி சடங்கிற்காக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை வைத்திருந்ததோடு தங்களது சொத்துக்களை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கவும் அதில் கூறப்பட்டிருந்தது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios