பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்! கிரிக்கெட் சங்க பணமோசடி வழக்கில் நடவடிக்கை!
ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்வரான ஃபரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியை துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம்சாட்டப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்கொண்டிருக்கிறார். டெல்லி மதுக் கொள்கை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய மூன்று சம்மன்களைப் புறக்கணித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
இவ்வாறு மத்திய பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இலக்காகி வருகிறார்கள். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவும் இப்போது குறிவைக்கப்பட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் யாத்திரைக்கு மணிப்பூர் அரசு நிபந்தனையுடன் அனுமதி!
86 வயதான ஃபரூக் அப்துல்லா ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர் லோக்சபா தொகுதி எம்.பி.யான இவர் மீது 2022ல் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்துக்குச் சொந்தமான நிதியை, கிரிக்கெட் சங்கத்தின் அலுவலகப் பொறுப்பாளர்கள் உட்பட பல்வேறு நபர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த வழக்கில் ஜம்மு காஷ்மீர் சங்கத்தின் அலுவலகப் பணியாளர்களுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், பணமோசடி வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியது.
ஃபரூக் அப்துல்லா 2001 முதல் 2012 வரை ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். அப்போது சங்கத் தலைவர் பதவியை துஷ்பிரயோகம் செய்து பணி நியமனங்களைச் செய்தார் என்றும் பிசிசிஐ நிதியில் மோசடி செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டு வரும் இந்த மோசடி 2004 முதல் 2009 வரையான காலத்தில் நடந்ததாகத் தெரிகிறது.
தேவாலயத்தில் சவுண்டு விட்ட அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு