என்னை கொல்ல வேண்டுமானால் நெஞ்சில் சுடுங்கள்; முதுகில் குத்தாதீர்கள் என காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கதறியுள்ளார்.  

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இரு நாட்டு எல்லைகளிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு தூதரகங்களுக்கு முன் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். 

ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் இருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியேறிய அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ’’என்னை கொல்ல வேண்டுமானால் நெஞ்சில் சுடுங்கள்; முதுகில் குத்தாதீர்கள். ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு செய்தது ஜனநாயக விரோத நடவடிக்கை.'என் மாநிலம் எரிந்து கொண்டிருக்கும் போது நான் ஏன் வீட்டில் இருக்க வேண்டும்? நான் நம்பிக்கை வைத்த இந்தியா இது அல்ல. மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுவோம். நான் வீட்டு காவலில் வைக்கப்படவில்லை என நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது பொய். எனது மகன் ஒமர் அப்துல்லா சிறை வைக்கப்பட்டு உள்ளார்’’ என்று அவர் கூறினார். முன்னதாக, பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆலியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.