vFarmers protest in Maharastra the 2nd day
மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று 2-வது நாளாக காய்கறிகளை சாலையில் கொட்டினார்கள்.
விவசாயிகள் கோரிக்கை
மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக உள்ளார்.
வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கு சிறந்த கொள்முதல் விலை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து அங்கு விவசாயிகள் போராடி வந்தனர்.

இதனிடையே, தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் கடந்த செவ்வாய்க்கிழமை விவசாயிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.
போராட்டம் தீவிரம்
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, மகாராஷ்டிரா விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பால், காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாகராஷ்டிர மாநில விவசாயிகள் போராட்டம் இரண்டாவது நாளான நேற்று தீவிரம் அடைந்தது. பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் முதலியவற்றை சாலைகள் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
