Farmers protest in Madyapredesh..set fire vehicles
மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் 6 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் கடந்த ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Mandsaur பகுதியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 விவசாயிகள் உயிரிழந்தனர்.
மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசாரின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து Ujjain, Dewas, Mandsaur, Neemuch, sehore உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
Mandsaur, Piplia Mandi ஆகிய பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையை ஒடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விவசாயிகள் தொடர் போராட்டத்தால், மத்தியப்பிரதேசத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
