மகன் மற்றும் மருமகள் தனக்கு மிகுந்த உதவியாக இருந்தார்கள் என்றும், இந்த லாபம் தனது குடும்பம் வேர்வை சிந்தி உழைத்ததற்கு கிடைத்த பரிசு என்றும் துக்காராம் தெரிவித்துள்ளார்.

வருடா வருடம் பல பிரேக்கிங் நியூஸ்களை தொடர்ச்சியாக கொடுத்து வருகிறது தக்காளி என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கிய நிலையில், வட மாநிலங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் அதன் வர்த்தகமும் விண்ணை முட்டும் அளவிற்கு எகிறி உள்ளது. 

இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர், ஆனால் இந்த சோகமான நிலையிலும் ஒரு ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் நடந்துள்ளது. புனேவை சேர்ந்த துக்காராம் என்பவருக்கு 15 ஏக்கருக்கு மேல் நிலம் சொந்தமாக உள்ளது. 

அட..! உண்மையான வாஷிங் பவுடர்தான் போலயே? அஜித் பவார் முகாமுக்கு கிடைத்த முக்கியத் துறைகள்!

அதில் சுமார் 10 ஏக்கருக்கு மேல் அவர் தக்காளி விவசாயம் செய்து வருகிறார், குறிப்பாக கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 13,000 கிரேட் தக்காளிகளை அறுவடை செய்து அவர் விற்றுள்ளார். ஒவ்வொன்றும் சுமார் ஆயிரம் முதல் 2500 ரூபாய் வரை விற்பனையான நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அவர் சுமார் 1.5 கோடி சம்பாதித்து அசத்தியுள்ளார்.

மகன் மற்றும் மருமகள் தனக்கு மிகுந்த உதவியாக இருந்தார்கள் என்றும், இந்த லாபம் தனது குடும்பம் வேர்வை சிந்தி உழைத்ததற்கு கிடைத்த பரிசு என்றும் துக்காராம் தெரிவித்துள்ளார். அவரை போலவே அப்பகுதியில் உள்ள பல விவசாயிகள் இந்த முறை தக்காளி சாகுபடியில் நல்ல லாபம் பார்த்துள்ளனர். 

கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 900 கூடை தக்காளிகளை, ஒரு கூடை ரூபாய் 2100 வீதம் 900 கூடைக்கு ஒரே நாளில் சுமார் 18 லட்சம் சம்பாதித்துள்ளார் துக்காராம்.

” உங்களுக்கு சூனியம் பற்றி தெரியாது” தகனம் செய்யும் போது, பாதி எரிந்த உடலை சாப்பிட்ட இருவர் கைது..